தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் சூடு பிடிக்கும் பணி நியமனங்கள்

ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் சூடு பிடிக்கும் பணி நியமனங்கள்

ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் சூடு பிடிக்கும் பணி நியமனங்கள்


UPDATED : மே 18, 2011 12:00 AM

ADDED : மே 18, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2011 12:00 AM ADDED : மே 18, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டீம் லீஸ் என்ற பணிவாய்ப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு கள ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவெங்கும் உள்ள மிக முக்கியமான 640 நிறுவனங்களின் உயர்மட்ட எக்ஸிக்யூட்டிவ்களுக்கிடையே நடத்தப்பட்டது. பணிவாய்ப்பு வளர்ச்சி வாய்ப்புகள், வர்த்தக உலகின் தற்போதைய நிலை, பணியெடுப்பு கணிப்புகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையினை டீம் லீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஜூன் வரையில் ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் அதிக அளவில் பணி நியமனங்கள் செய்யும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.


டீம் லீஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிற்கும் வெளியிடும் 'எம்ப்ளாய்மெண்ட் அவுட்லுக் இண்டெக்ஸ்' என்ற குறியீடு 70லிருந்து 74 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பணி நியமனங்கள் செய்வதில் ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., மற்றும் டெலிகம்யூனிகேஷன் துறைகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., பணி நியமனங்களைப் பொறுத்த வரை புது டில்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் புனேயில் பணி நியமனங்கள் மிக அதிக அளவில் உள்ளது.


நிர்வாகப் பணிகளான கீழ் நிலை, நடுத்தர நிலை, முது நிலை ஆகிய அனைத்து மட்டங்களிலும் தீவிரப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணித் தன்மையைப் பொறுத்த வரை சேல்ஸ், மார்க்கெடிங், வாடிக்கையாளர் சேவை என்ற பணிகளே 80 சதவிகித பணியிடங்களை நிரப்பியுள்ளன.


வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து இந்தியாவில் அதிக அளவு பணி நியமனங்களைச் செய்வதையே உறுதிப்படுத்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us