தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி., துறையில் சிறந்த பணி எதிர்காலம் பெற என்ன தேவை?

ஐ.டி., துறையில் சிறந்த பணி எதிர்காலம் பெற என்ன தேவை?

ஐ.டி., துறையில் சிறந்த பணி எதிர்காலம் பெற என்ன தேவை?


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 02:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 02:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் இந்தியாவில் சிறந்த பணிகள் என்றால் இன்ஜினியரிங், மருத்துவம், வங்கி, இன்ஸ்யூரன்ஸ், ரயில்வே போன்ற பணிகளைச் சொல்வார்கள். ஆனால் ஐ.டி., துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியின் காரணமாக இந்தத் துறைகளின் புகழ் மங்கி வருவது என்னவோ உண்மைதான்.


ஐ.டி., துறையை தங்கள் இலட்சியமாகக் கொண்டு இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் இயங்குவதும் இதன் காரணமாகத்தான். ஆனால் ஐ.டி., துறையில் வெற்றிகரமாகத் திகழவும், பணி மேன்மை பெறவும் புத்தகப் படிப்பு மட்டும் போதுமானது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஐ.டி., துறையின் வல்லுனர்கள் சிலர் இத்துறையில் மேன்மை பெற நான்கு முக்கிய திறன்கள் தேவை என்று வகைப்படுத்துகிறார்கள்.


ஏற்றுக்கொள்ளும் தன்மை எனப்படும் அடாப்டபிளிட்டி இத்துறையில் மேம்படத் தேவைப்படும் முக்கிய திறனாகும். மற்ற துறைகளைவிட ஐ.டி., துறையில் அன்றாடம் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. எனவே முக்கிய திறன்களைக் கற்றுக் கொள்ளும் தன்மை இத்துறையின் அடிப்படைத் தேவையாகும். பணிக்காலம் முழுவதிலும் புதிய அம்சங்களைக் கற்பதும், வேலையைப் பொறுத்தவரை தானாகவே முன் வந்து புதிய பணிகளைத் துவக்கும் திறமையும் ஐ.டி., துறைக்கு தேவை.


புராஜக்ட்களை நிர்வகிக்கும் திறமை இரண்டாவது முக்கியத் தேவையாகும். புராஜக்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் சிறந்த திறமைகளைப் பெற்றவர்களுக்கு ஐ.டி., துறையில் கிராக்கி அதிகம் நிலவுகிறது. ஒரு புராஜக்டின் கரு உருவாக்கத்திலிருந்து, செயல்படுத்துதல், முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற ஒவ்வொரு நிலையிலும் பங்களித்து அனுபவம் பெற்றவர்களே ஐ.டி., துறையில் மிகச் சிறந்த நிலையை அடைகிறார்கள்.


வணிக அறிவு என்பது ஐ.டி., துறையின் மூன்றாவது முக்கியத் தேவையாகும். நிர்வாகவியல் திறனுடன் ஐ.டி., கல்வித் தகுதி உடையவர்களையே இன்றைய ஐ.டி., நிறுவனங்கள் விரும்பித் தேர்வு செய்கின்றன. இதற்காக எம்.பி.ஏ., போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டியதில்லை என்ற போதும் ஐ.டி., துறைக்கும் வணிக ரீதியான தேவைகளுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் திறமை மிக்கவர்களுக்கே ஐ.டி., துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.


கோடிங் மற்றும் தகவல் பரிமாற்றத் திறன்கள் ஐ.டி., துறைக்கான நான்காவது முக்கியத் தேவையாகும். ASP.Net, VB.net, XML, PHP,  போன்றவற்றில் நல்ல திறமை இருந்தால் நல்லது. எவ்வளவுதான் கோடிங் திறமை இருந்தாலும், ஒரு குழுவில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் திறனுள்ளவர்களே டீம் லீடர் அல்லது புராஜக்ட் கோஆர்டினேட்டர்களாக வர முடியும் என்று இந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us