எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ். :தர வரிசை பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ். :தர வரிசை பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM
ADDED : ஜூன் 21, 2011 09:53 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள, 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளுக்கு இதுவரை, 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், இப்படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை முதல் வாரம் துவங்கும் எனவும், மருத்துவக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். விண்ணபித்தவர்களின் ரேண்டம் எண் அறிய http://tnhealth.org/mbbs2011/mbbsrandom.php?action=1 இணைய தளத்தைப் பார்க்கவும்.
