தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : சித்தா மாணவர் போராட்டம்

பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : சித்தா மாணவர் போராட்டம்

பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : சித்தா மாணவர் போராட்டம்


UPDATED : ஆக 27, 2011 12:00 AM

ADDED : ஆக 27, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2011 12:00 AM ADDED : ஆக 27, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில், அரும்பாக்கம் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவ முறை கல்லூரிகளில், மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

இப்போராட்டம் குறித்து, சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் செல்வின் தாஸ் கூறியதாவது: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ பாடத் திட்டத்திலிருந்து அலோபதி பாடங்களை நீக்க, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவ பட்ட படிப்புகளுக்கு தற்போதுள்ள பெயரே தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் பரிந்துரைத்த பாடத் திட்டத்தை மாற்றக் கூடாது. இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.

இது தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்துவர்.இவ்வாறு செல்வின் தாஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us