தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத் தேர்வு : மாணவர்களை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

பொதுத் தேர்வு : மாணவர்களை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

பொதுத் தேர்வு : மாணவர்களை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்


UPDATED : நவ 15, 2011 12:00 AM

ADDED : நவ 15, 2011 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2011 12:00 AM ADDED : நவ 15, 2011 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் பட்டியலில், மாணவர்களின் பெயர், பள்ளி, பாடம், மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். இதனால், மோசடிக் கும்பல்கள், போலி மதிப்பெண் பட்டியல்களைத் தயாரித்து, புழக்கத்தில் விட்டு வந்தன.

குறிப்பாக, கடந்த ஆண்டு, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கையின் போது,  போலி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள் பிடிபட்டன.

இதையடுத்து, போலி மதிப்பெண் பட்டியல் தயாரிக்க முடியாதபடி, பல்வேறு பாதுகாப்புக் குறியீடுகளுடன், ஸ்கேன் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் பட்டியல்களை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. நடப்பு கல்வியாண்டுத் தேர்விலேயே, இம்முறையை அமல்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரம், மாவட்ட வாரியாக பெறப்பட்டு விட்ட நிலையில், மாணவர்களின் புகைப்படங்களைச் சேகரிக்கும் பணியை, தற்போது தேர்வுத் துறை முடுக்கி விட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பாக, பிரத்யேக படிவங்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

இதில், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, படங்களுடன் கூடிய, சிடிக்களை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல் தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம், அனைத்து, சிடிக்களும் சேகரிக்கப்பட்டு, டேட்டா சென்டரிடம் வழங்கப்படும்.

பள்ளிகளில், மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் எடுக்கும் பணியை, அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும்; அதற்கான செலவினங்களையும், அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு திடீரென கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us