தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடல்சார் கல்வி பல்கலைக்கழகம்: மசோதாவுக்கு தமிழக எம்.பி., மறுப்பு

கடல்சார் கல்வி பல்கலைக்கழகம்: மசோதாவுக்கு தமிழக எம்.பி., மறுப்பு

கடல்சார் கல்வி பல்கலைக்கழகம்: மசோதாவுக்கு தமிழக எம்.பி., மறுப்பு


UPDATED : அக் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது மேற்கு வங்க எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் அதிக அளவில் அவையில் இல்லை. கோரம் இல்லை என்பதால் அவைக்கு வரும்படி மார்க்சிஸ்ட் எம்.பி.,யான மோகனை அழைத்தபோது, அவர் அவைக்கு வர மறுத்துவிட்டார்.
நிலைக்குழு பரிந்துரைத்தபடி கோல்கட்டாவிலும் இந்த பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென மோகன் வலியுறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை அருகே கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு வழிவகை செய்யும் மசோதாவை முன்பு ஒரு முறை அறிமுகம் செய்ய முயன்றபோது, அமைச்சர் டி.ஆர்.பாலுவை அவையிலேயே மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயன்றனர்.
இந்நிலையில் அந்த மசோதா பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு திரும்ப வந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலை நிதிநிலை மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையில் போதிய எண்ணிக்கையில் எம்.பி.,க்கள் இல்லை. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க எம்.பி.,யான அமீதா நந்தி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மசோதா அறிமுகம் செய்யும் போது எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வழக்கம்தான். ஆனாலும் இந்த எதிர்ப்பு காரணமாக அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி.,க்களை அழைப்பதற்காக தி.மு.க., கொறடாவான கிருஷ்ணசாமி சென்றபோது, பார்லிமென்ட் நூலகத்தில் மதுரை எம்.பி.,யான மோகனும் நாகர்கோவில் எம்.பி., யான பெல்லார்மினும் இருந்தனர்.
அவர்களிடம் அவைக்கு வரும்படி கிருஷ்ணசாமி அழைத்தபோதிலும் அவர்கள் இருவரும் வர மறுத்துவிட்டனர். ‘இந்த பல்கலைக் கழகம் கோல்கட்டாவிலும் அமைக்க வேண்டும். பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்த இதை ஏன் ஒப்புக் கொள்ளவில்லை,’ என்று மோகன் கூறியதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இவர்கள் இருவரையும் அழைத்துப் பார்த்துவிட்டு வராமல் போகவே கிருஷ்ணசாமி அவைக்கு திரும்பினார். கோரம் இல்லை என்பதால், கிடைத்த காலஅவகாசத்தில் அமைச்சர் பாலு மற்றும் வயலார் ரவி ஆகியோர் ஆங்காங்கு இருந்த எம்.பி.,க்கள் பலரையும் அழைத்து வந்து அவைக்குள் உட்கார வைத்தனர். அதன் பின்னர் 15 நிமிடங்கள் பேசிய அமைச்சர் பாலு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழகத்துக்கு கிடைக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க., வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தன. அவையிலிருந்து நூறடி தூரத்தில் இருந்துகொண்டே அவைக்கு வர மறுத்துவிட்ட மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களின் செயல், மற்ற எம்.பி.,க்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவர்கள் மட்டுமல்லாது அன்றைய தினம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அமைச்சர்கள் பழனி மாணிக்கம், இளங்கோவன், மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.பி.,க்கள் வேணுகோபால், சித்தன், அப்பாத்துரை, சுப்பராயன், காதர்மொய்தீன் ஆகிய எம்.பி.,க்களும் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us