தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லாஜிக் வைத்து படிக்க வேண்டும்: வெற்றிக்கு வழி கூறும் மாணவர்கள்

லாஜிக் வைத்து படிக்க வேண்டும்: வெற்றிக்கு வழி கூறும் மாணவர்கள்

லாஜிக் வைத்து படிக்க வேண்டும்: வெற்றிக்கு வழி கூறும் மாணவர்கள்


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு:
ஏ.ஜெயச்சித்ரா, சூசையப்பர்பட்டிணம் சகாயராணி பள்ளி:
நம்பிக்கை இருந்தால் லட்சியத்தை எட்ட முடியும். டைம் டேபிள் வைத்து படித்தால் நூறு மதிப்பெண் பெறலாம். மாநிலத்தில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளேன். இரவு 9 மணிக்குள் கணிதம் படிக்க வேண்டும். அறிவியலுக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும். படித்தவற்றை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
புவனேஸ்வரி, சிவகங்கை அரசு மேல்நிலைப்பள்ளி:
தினமும் எவ்வளவு நேரம் முடியுமோ அந்தளவிற்கு படிக்க வேண்டும். அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறேன்.
எம்.கார்த்திகேயராணி, சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளி:
டிவி பார்க்கவே கூடாது. மற்றவர்கள் டிவி பார்க்கும் போது தனி அறைக்கு சென்று படிக்க வேண்டும். காலையில் 2 மணி, மாலை 3 மணி நேரம் படிக்க வேண்டும்.
ஆர்.சுரேஷ்கிருஷ்ணா, பெரியகோட்டை அரசு பள்ளி:
கடினமாக கருதும் பாடங்களை அதிகாலையில் படிக்க வேண்டும். ஆசிரியர்களை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்கள் சாதிக்க முடியாது என்பது பொய். கிராமங்களில் தான் படிப்பதற்கு உரிய சூழல் உள்ளது.
ஈஸ்வரி, செக்ககுடி புனித சூசையப்பர் பள்ளி:
அதிகாலை 4 மணிக்கு எழுந்து அறிவியலை படிப்பேன். 6 மணிக்கு தமிழ், இரவு 8.30 மணிக்கு கணக்கு என நேரம் ஒதுக்கி படிக்கிறேன். தினமும் 15 நிமிடம் யோகாசன பயிற்சி அவசியம். ஆசிரியர்களை நேசிக்க வேண்டும். 498 மதிப்பெண் என இலக்கு நிர்ணயித்துள்ளேன்.  இலக்கை எட்டுவேன் என்ற முழு நம்பிக்கை உள்ளது. டாக்டராகி சேவை செய்வேன்.


பிளஸ் 2:


ரவிச்சந்திரன், ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் பள்ளி:
அதிகாலை கணிதம் படிக்க வேண்டும். வேதியியல் சமன்பாடுகளை எழுதி பார்க்க வேண்டும்.
பி. மார்சன், பள்ளிதம்மம் டான் பாஸ்கோ பள்ளி:
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஆங்கிலம் படிப்பேன். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், மீண்டும் 10 மணி முதல் 11.30 மணி வரையும் படிப்பேன். அக்கவுன்டன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆங்கிலத்தில் நன்றாக பேச தமிழ் வாக்கியங்களை டிரன்ஸ்லேட் செய்து எழுதி பார்க்க வேண்டும். லாஜிக்  வைத்து படிக்க வேண்டும்.
கருப்பசாமி, வேம்பத்துவர் அரசு பள்ளி:
அதிகாலையில் இயற்பியலை படிப்பேன். இதில் நூறு மதிப்பெண் எடுத்து வருகிறேன். கணிதத்திலும் நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்பது லட்சியம். கடின பாடங்களை அதிகாலையில் எழுதி, படிக்க வேண்டும்.
என்.இலக்கியா, மானாமதுரை அரசு பள்ளி:
தமிழ் தானே என நினைக்காமல், தமிழ் தேனே என நினைக்க வேண்டும். அதிகாலையில் எழ வேண்டும். நினைவாற்றலை வளர்த்து கொள்ள யோகா போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
டி.எஸ்.பிரியங்கா, சிவகங்கை அரசு மகளிர் பள்ளி:
எண்ணம் உயர்வாக இருந்தால் வாழ்க்கையும் உயர்வாக இருக்கும். வானமே எல்லை என்ற இலக்குடன் படிக்க வேண்டும். தினமும் 5 மணி நேர துவக்கம் போதுமானது. கணிதத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். முன்பு நமக்கு வந்த தோல்வியை நாமே தோற்கடிக்க வேண்டும்.
பரமேஸ்வரி, சிவகங்கை புனித சூசையப்பர் பள்ளி:
தமிழை பிழையின்றி எழுத வேண்டும். அதிகாலை ஆங்கிலம், கணிதம் படிக்க வேண்டும். இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். பாடங்களை படிக்கும் போது அடிக்கோடிட வேண்டும். படித்தவற்றை எழுதி பார்க்க வேண்டும்.
கோகிலா, மானாமதுரை செவன்த் டே பள்ளி:
படங்களை வரைந்து பயிற்சி எடுக்க வேண்டும். சமன்பாடுகளை எழுதி பார்க்க வேண்டும். கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற கடின முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

முதல் மாணவர்கள்

நிகழ்ச்சிக்கு, வாகுலத்துப்பட்டி சர்வசேவா பள்ளி மாணவர் எஸ்.கென்னடிராஜா அதிகாலை 4.30 மணிக்கும், நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்., பள்ளி மாணவி எம்.ரேவதி காலை 6.30 மணிக்கும் முதல் ஆளாக வந்து விட்டனர். கென்னடிராஜா கூறுகையில், சிவகங்கையில் உள்ள சகோதரர் வீட்டில் இரவு தங்கி அதிகாலை 3 மணிக்கு எழுத்து புறப்பட்டு வந்தேன் என்றார். ரேவதி கூறுகையில், மேலூர் அருகே சாணிபட்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வந்தேன் என்றார். இவர்களின் ஆர்வம் மற்றும் துடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us