தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டோகிராபி - நம் திறமைக்கேற்ற பணி மற்றும் வருமானம்

போட்டோகிராபி - நம் திறமைக்கேற்ற பணி மற்றும் வருமானம்

போட்டோகிராபி - நம் திறமைக்கேற்ற பணி மற்றும் வருமானம்


UPDATED : ஆக 03, 2013 12:00 AM

ADDED : ஆக 04, 2013 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2013 12:00 AM ADDED : ஆக 04, 2013 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு நல்ல போட்டோகிராபி என்பது, கூரிய உணர்நுட்பத் திறன் மற்றும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்து, மிகவும் எதார்த்தமாகவும், நுட்பமாகவும் படம் பிடிக்கும் கலையாகும்.

கற்றல் செயல்பாடு

பலவிதமான கேமராக்கள் மற்றும் லென்ஸ் மற்றும் ஸ்டுடியோ லைட்டிங் ஆகியவற்றை கையாள்வது எப்படி என்பது குறித்தும், விளம்பரம், பேஷன், டாகுமென்டரி மற்றும் டிரவால் ஆகிய போட்டோகிராபியின் பல்வேறான பரிமாணங்கள் குறித்தும் இத்துறை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

மேலும், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைப் பணிகளில், இன்டர்ன்ஷிப் பணிகளுக்கும் செல்கிறார்கள். மாணவர்களின் ஆர்வத்திற்கேற்ப பல்வேறான பணிகளில் ஈடுபட முடியும். பலர் free lance பணிகளில் இருக்கிறார்கள் மற்றும் பத்திரிகைத் துறை ஆர்வமுள்ளவர்கள், மீடியா மற்றும் பப்ளிகேஷன் பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள்.

படிப்பைத் தேர்ந்தெடுத்தல்

போட்டோகிராபியை ஒரு முழுநேர தொழிலாக தேர்வு செய்ய விரும்புவோருக்கு, போட்டோகிராபியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பு ஏற்றது. அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பானது, வகைப்பாடு ரீதியிலான போட்டோகிராபிக்கும், வார இறுதிநாள் படிப்பானது, பொழுதுபோக்கு போட்டோகிராபிக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்த போட்டோகிராபி படிப்பை, மூன்று வருட BFA, ஒரு வருட டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பல முறைகளில் படிக்கலாம். சிலர், போட்டோகிராபியை, add - on முறையிலும், பகுதிநேர முறையிலும் படிக்கிறார்கள்.

கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, படிப்பிற்கான கட்டணங்கள் வேறுபடுகின்றன. தனியார் கல்லூரிகளில், ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு, ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும்.

திறன் மேம்பாடு

ஒரு போட்டோகிராபி மாணவர், முதலில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தவறாமல், உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பின்னர், நுட்பங்களைப் படிக்கலாம். உலகைப் புரிந்துகொள்வதுதான் முதல் தகுதியே. எனவே, ஒரு DSLR கேமராவை வாங்கி, சாதாரணமாக புகைப்படும் எடுத்துப் பழக வேண்டும்.

திறனை சரியான முறையில் வெளிப்படுத்தல்

உங்களின் போட்டோகிராபி திறனை வெளிப்படுத்த, இன்றைய தேதியில், ஆன்லைன் நெட்வொர்க்கிங் என்பது ஒரு சிறந்த வழிமுறையாகும். இது ஒரு எகனாமிக்கல் மற்றும் டைனமிக் வழிமுறையாகும். சமூக தளங்கள், பேஸ்புக் மற்றும் இதர அம்சங்களில் உங்களின் புகைப்படங்களை பார்வைக்கு வைக்கலாம்.

பிரின்டிங் செலவு இப்போது குறைந்து விட்டதால், படங்களை எடிட் செய்து, ஒரு நல்ல narrative புத்தகத்தை தயார்செய்து, அதை client -இடம் கொடுக்கலாம்.

வேலை வாய்ப்பு

இத்துறை நிபுணர், சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தலாம் மற்றும் freelance ப்ராஜெக்ட் வாங்கியும் பணியாற்றலாம். மேலும், ஒரு நிபுணத்துவ போட்டோகிராபரிடம், அதாவது ஆர்ட் டைரக்டர் போன்றவர்களிடம் ஆரம்பநிலையில் பணியில் சேர்வது நல்லது. அதேசமயம், செய்தி போட்டோகிராபரிடம் சேர்வதும் வரவேற்கத்தக்கதே.

ஒரு போட்டோகிராபர், தினமும் அதிக தனி மனிதர்களை தனது தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். வணிகம், பத்திரிகை, செய்தித்தாள், விளம்பரம், வலைதளங்கள் மற்றும் திருமணம் ஆகிய அம்சங்களுக்கு தொழில்முறையிலான உயர் ரக போட்டோக்கள் எடுக்கப்படுகின்றன.

வருமானம் எவ்வளவு?

மேலும், e - commerce துறையின் வளர்ச்சியால், சரியான பொருள் நுட்பத்தில் படம் பிடிக்கும் ப்ராடெக்ட் போட்டோகிராபர்களின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆபரணங்கள், உடைகள், ஷ¤க்கள் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றை படம் பிடிக்கும் அவர்களுக்கு, ஆரம்பகட்டத்தில், மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதேசமயம், எடிட்டோரியல் போட்டோகிராபர், மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு சீனியர் போட்டோகிராபரிடம் உதவியாளராக இருப்பவர், மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்பார். மேலும், பேஷன் மற்றும் திருமண போட்டோகிராபர்கள், ஒரு தடவை தங்களை நிரூபித்துவிட்டால், அவர்களுக்கான மவுசே தனிதான்.

நீங்கள் சுயமாக தொழில்செய்யும் போட்டோகிராபராக இருந்தால், உங்களுக்கு வரும் பணியைப் பொறுத்து, ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். ஒருவரின் அனுபவம், திறமைகள் மற்றும் வாடிக்கையாளர் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, வருமானமும் வேறுபடும்.

படிப்பு - பி.எப்.ஏ.,(BFA) (போட்டோகிராபி), சான்றிதழ் படிப்பு / டிப்ளமோ படிப்பு

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பு

சிறந்த கல்லூரிகள்

காலேஜ் ஆப் ஆர்ட், ரகுராய் சென்டர் பார் போட்டோகிராபி, ஸ்ரீ அரபிந்தோ சென்டர் பார் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், ஜாமியா மிலியா இஸ்லாமியா.

பணி நிலைகள்

Portrait photographer, product photographer, industrial photographer, documentary photographer, photo journalist.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us