தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடினப் பாட நீக்கம் மாணவர்களுக்குத் தான் லாபம்: ஆசிரியர்கள் கருத்து

கடினப் பாட நீக்கம் மாணவர்களுக்குத் தான் லாபம்: ஆசிரியர்கள் கருத்து

கடினப் பாட நீக்கம் மாணவர்களுக்குத் தான் லாபம்: ஆசிரியர்கள் கருத்து


UPDATED : நவ 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலும், அறிவியல் பாடத்தில் கணிசமாக ஏற்பட்டு வரும் தோல்வி, வரும் பொதுத் தேர்வில் குறையும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் பல பகுதிகள் கடினமாக இருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதிகளை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரண்டு பாடங்களிலும் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து, ஆசிரியர்கள் குழு அளித்த பரிந்துரையை அப்படியே தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அறிவியல் பாடப் பகுதி நீக்குவதற்கான குழுவில், சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் இடம் பெற்றிருந்தார்.
அறிவியல் பாடப் பகுதிகளை நீக்கம் செய்துள்ளது குறித்து அவர் கூறியதாவது:
அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை பல பகுதிகள் நீளமாக இருந்தன. குறிப்பாக, தாவரவியலில் அது போன்ற பகுதிகள் அதிகம். இந்தப் பகுதிகளை மாணவர்கள் சிரமப்பட்டு படித்தாலும், அதில் இருந்து ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கேள்விகளே கேட்கப்பட்டன.
 ‘தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள்’ என்ற தலைப்பில் பல பக்கங்கள் இருந்தாலும், அதிலிருந்து ஒரு மதிப்பெண் மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பகுதிகளைத் தான் நீக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்திருந்தோம். அரசும், நாங்கள் கொடுத்த பரிந்துரையை அப்படியே ஏற்று, நீக்கம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிளஸ் 1ல் படிக்க வேண்டிய பகுதிகள் பத்தாம் வகுப்பிலும் படிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. அந்தப் பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘அணுக்கரு உலை’ பாடம் பிளஸ் 1ல் வந்தாலும் பத்தாம் வகுப்பில் நீக்கப்படவில்லை. தற்போதைய காலகட்டத்திற்கு அந்தப் பாடத்தை மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை அப்படியே விட்டுள்ளோம்.
ஒரு கேள்விக்கு பல வகையான எடுத்துக்காட்டுகள் இருந் ததை மாற்றி, ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் இடம் பெறும் வகையில் மாற்றப் பட்டுள்ளன. இரண்டு பாடங்களிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்த கடினமான பகுதிகள் அனைத்தும் நீக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் அதிகமான மதிப் பெண்களைப் பெற முடியும்.
கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். வரும் பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். மாணவர்களுடைய பிரச்னையை புரிந்து அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு மோகன்தாஸ் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமலை கூறியதாவது:
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் கடினம் என்பதற்கு பயந்தே, பல மாணவர்கள் அறிவியல் ‘குரூப்’ எடுக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் அறிவியல் ‘குரூப்’பை விட, வணிகவியல் ‘குரூப்’பில் தான் அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர்.
அறிவியல், கணிதம் இரண்டு பாடங்களிலும் கடினமான பகுதிகளை நீக்கியிருப்பதால், அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகள், மற்ற பகுதிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
எளிதான பகுதிகளில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்தி படிக்கும் போது, கண்டிப்பாக அதிகமான மதிப் பெண்களை பெறுவர். இந்த பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும். இவ்வாறு திருமலை கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us