தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவைக்கு இன்று வருகிறது "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்": மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கோவைக்கு இன்று வருகிறது "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்": மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கோவைக்கு இன்று வருகிறது "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்": மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மலைகளின் மகத்துவத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் விளக்கும், "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்", கோவை ரயில்வே ஸ்டேஷனில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.

அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையுடன் இணைந்து, "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்-பயோ டைவர்சிட்டி ஸ்பெஷல்" என்ற பெயரில், சிறப்பு கண்காட்சி ரயிலை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

கடந்த 2007ல் தனது பயணத்தைத் துவக்கிய இந்த சிறப்பு ரயில், இதுவரை நாடு முழுவதும் 95 ஆயிரம் கி.மீ., பயணித்து, 305 ஊர்களில் 1111 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது; 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதைக் கண்டு களித்துள்ளனர். நடப்பாண்டில், கடந்த ஏப்.,9ல் டில்லியில் தனது பயணத்தை மீண்டும் துவக்கிய இந்த ரயில், இதுவரை 62 நகரங்களில் நிறுத்தப்பட்டு, இன்று கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறது.

இன்று முதல் வரும் 23ம் தேதி வரை, 6வது பிளாட்பார்மில் இந்த ரயில் நிற்கும். காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை, பார்வையிடலாம். கண்காட்சி ரயிலை, சேலம் டி.ஆர்.எம்., சுஜாதா ஜெயராஜ், கலெக்டர் கருணாகரன் ஆகியோர், இன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர்.

இந்த சிறப்பு ரயிலில், 16 ஏ.சி., பெட்டிகள் அமைந்துள்ளன; அவற்றில், எட்டு பெட்டிகளில், இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கங்கைப் பரவு நிலப்பகுதி, வடகிழக்கு இந்தியா, பாலைவனப்பகுதிகள், டெக்கான் தீப கற்பம், இந்திய கடற்கரைப் பகுதிகள், நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் என நமது நாட்டிலுள்ள பல்வேறு இயற்கை அமைப்புகள், தாவர வகைகள், நுண்ணுயிர்களிலிருந்து பறவைகள், வன உயிரினங்கள் என, எல்லா வகை உயிர்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

பாதுகாப்பான சுற்றுச்சூழலை வலியுறுத்துகிறது ஒரு பெட்டி; காலநிலை மாறுபாட்டுக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது மற்றொரு பெட்டி. ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை விளக்க ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில், "கிட்ஸ் ஜோன்" என்று தனிப்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது."ஜாய் ஆப் சயின்ஸ்" என்ற பெயரிலுள்ள ஆய்வகப்பெட்டியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் திறனை பரிசோதிக்கலாம்.

மாணவ, மாணவியர்க்கு அரிய பல விஷயங்களை விளக்கும் "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலை, பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ரயில்வே அதிகாரிகளும், சுற்றுச்சூழல் அமைப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தவிர்க்க வேண்டியவை

இந்த கண்காட்சி ரயிலைப் பார்வையிட வருவோர், குட்ஷெட் ரோட்டில் மேற்கு நுழைவாயிலின் வழியாக உள்ளே வரலாம்; நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை; ஆனால், மொபைல் போன், காமிராக்களைக் கொண்டு படமெடுக்க அனுமதியில்லை. தீப்பிடிக்கும் பொருட்களையும், வேறு திரவப்பொருட்களையும் எடுத்து வரக்கூடாது; நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டுமென்பதால், தொப்பி அணிந்து வருவதும், கைகளில் குடிநீர் பாட்டில் கொண்டு வருவதும் நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us