தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு போட்டி: புதுச்சேரியில் நாளை துவங்குகிறது

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு போட்டி: புதுச்சேரியில் நாளை துவங்குகிறது

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு போட்டி: புதுச்சேரியில் நாளை துவங்குகிறது


UPDATED : ஆக 22, 2013 12:00 AM

ADDED : ஆக 22, 2013 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2013 12:00 AM ADDED : ஆக 22, 2013 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு போட்டி மற்றும் ஸ்கேட் போர்டிங் போட்டி, நாளை துவங்குகிறது. இதுகுறித்து கலியாலே சர்ப் பள்ளி பொறுப்பாளர்கள் ஜூயன், சாமே ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியை சேர்ந்த கலியாலே சர்ப்பள்ளி மற்றும் போதி கபே, புதுச்சேரி சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, புதுச்சேரியில் இரண்டாவது முறையாக, உலக அளவிலான "சர்பிங்" போட்டியை வரும் 23ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை நடத்துகின்றனர். இப் போட்டிகள், புதுச்சேரி சீகல்ஸ் ஓட்டலுக்குப் பின்புறமுள்ள, கடல் பகுதியில் நடக்கிறது.

போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 40 வீரர்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், மாலத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.போட்டிகள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் , 16 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டி நடக்கிறது.

புதுச்சேரியில் முதன் முறையாக ஸ்கேட் போர்டிங் (மினி ரேம்ப்) போட்டி நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களும் கலந்துகொள்கின்றனர். தினம் காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை, போட்டி நடக்கிறது. இப் போட்டிகளை பொதுமக்கள் கட்டணமில்லாமல் கண்டுகளிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us