தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் ஆசிரியர் பள்ளி கட்டணம்? குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் ஆசிரியர் பள்ளி கட்டணம்? குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் ஆசிரியர் பள்ளி கட்டணம்? குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு


UPDATED : டிச 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சங்க தலைவர் பாபு தாக்கல் செய்த மனு:
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் இக்குழு அமைக்க வேண்டும். இது மாநில அரசுகளின் கடமை.
இக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி, கல்விக் கட்டணத்தை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் வசூலிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைத்துள்ள அதிகாரிகள் அடங்கிய குழு, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி அமைக்கப்படவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்காமல், பல்வேறு கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணாக உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து கட்டணம் நிர்ணயிக்க  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக, தமிழக அரசு குழுவை நியமித்துள்ளது. இதுவரை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில்  23 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் இடைக்காலமாக 23 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயித்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அரசும் ஏற்றுக் கொண்டு, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. எனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் நான்கு வாரங்களுக்குள் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் 3,500 ரூபாய் கட்டணம் வசூலித்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த 2002ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அனைத்திந்திய கல்வி நிறுவனங்களின் தலைவர் அரசகுமார், மற்றும் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மனுக்கள் தாக்கல் செய்தன.
இதை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்து ‘மாணவர்களிடம் இருந்து 3,500 ரூபாய் வசூலித்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என தமிழக அரசு கோரக் கூடாது’ என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us