தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர் பணி - அண்ணாமலை பல்கலை பட்டதாரிகளுக்கு மறுப்பு

பேராசிரியர் பணி - அண்ணாமலை பல்கலை பட்டதாரிகளுக்கு மறுப்பு

பேராசிரியர் பணி - அண்ணாமலை பல்கலை பட்டதாரிகளுக்கு மறுப்பு


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 166 பேராசிரியர்கள், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்த, 13 பேராசிரியர்களைப் பணியமர்த்த, இம்மாதம், 9ம் தேதி, இணையதளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் விண்ணப்பிக்க, 27ம் தேதி கடைசி நாள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் பிரிவில் படித்து பட்டம் பெற்றவர்கள், விண்ணப்பிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலையில், 1958 முதல், வேளாண் பிரிவு செயல்பட்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல வேளாண் நிபுணர்கள், இப்பல்கலையில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ராமசாமியும், அண்ணாமலைப் பல்கலையில் வேளாண் துறையில் படித்து பட்டம் பெற்றவர். தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் பிரிவு மாணவர்கள், பேராசிரியர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், 8,000 மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us