தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜ் பல்கலை துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனத்தை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்

காமராஜ் பல்கலை துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனத்தை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்

காமராஜ் பல்கலை துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனத்தை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்


UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM

ADDED : ஜூன் 27, 2014 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM ADDED : ஜூன் 27, 2014 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக, யு.ஜி.சி., விதிகளுக்கு புறம்பாக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. நியமனம் ரத்து செய்யப்படுகிறது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: இணைப் பேராசிரியராக பணிபுரிந்த கல்யாணி மதிவாணன், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகள்படி, ஏதாவது ஒரு பல்கலையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி மையத்தில், பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

மதுரை காமராஜ் பல்கலையில் விரிவுரையாளராக பணிபுரிந் தேன். எம்.லிட்.,- பி.எச்.டி.,படித்துள்ளேன். துணைவேந்தர் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது. துணைவேந்தர் தேர்வுக்குழுவிற்கு, எனது பெயரை தேர்வு செய்யுமாறு விண்ணப்பித்தேன். இணைப் பேராசிரியராக இருந்த கல்யாணியை நியமித்தது சட்டவிரோதம். அவர் துணைவேந்தராக பணியாற்ற தடை விதித்து, நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் பேராசிரியர்கள் இஸ்மாயில், சந்திரன்பாபு மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் வக்கீல்கள் ஜி.ஆர்.சாமிநாதன், லஜபதிராய், கிருஷ்ணன் ஆஜராகினர்.

நீதிபதிகள் உத்தரவு: மதுரை காமராஜ் பல்கலையில் 2011--12 ல் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, அரசு தேர்வுக்குழு அமைத்தது. மொத்தம் 104 பேரை தேர்வுக்குழு பரிசீலனை செய்து பேராசிரியர் ஜெயராமன், சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் கல்யாணி மதிவாணன், பேராசிரியர் டி.ராமசாமியை துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்தது.

கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்து, 2012 ஏப்.,9 ல் தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. மனுதாரர்கள், "கல்யாணி தனது முழுப் பணிக்காலத்தில் பேராசிரியராக பணிபுரியவில்லை. யு.ஜி.சி.,விதிகள்படி, 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்களைத்தான், துணைவேந்தராக நியமிக்க வேண்டும்" என்கின்றனர்.

எத்திராஜ் கல்லூரியில் 1981ல் உதவி பேராசிரியராக, கல்யாணி பணிபுரிந்துள்ளார். அவர், 1994ல் ஆங்கிலத்தில் பி.எச்.டி.,முடித்துள்ளார். அதே கல்லூரியில், இணைப் பேராசிரியர், ஆங்கிலத்துறை தலைவராக இருந்துள்ளார். பேராசிரியர் பணியை இணைப் பேராசிரியர் பணிக்கு சமமானதாக கருத முடியாது.

பேராசிரியராக 10 ஆண்டுகள், இணைப் பேராசிரியராக 8 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். இரண்டிற்கும் சம்பளத்தில் வேறுபாடு உள்ளது. பேராசிரியர் 10 புத்தகங்கள், இணைப் பேராசிரியர் 5 புத்தகங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணி இடம் இல்லை" என அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. கல்யாணியைத் தவிர, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 104 பேரில், 103 பேர் பேராசிரியர்கள். இவ்விபரம், கவர்னர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது.

நிபுணத்துவம் பெற்ற தரமான கல்வியாளர்களை, துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். சென்னை பல்கலையில் பல்வேறு நீதிபதிகள், துணைவேந்தர் பதவியை அலங்கரித்துள்ளனர். கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜான் ஜார்ஜ் உட்ராப், சர்.சுப்பிரமணிய அய்யர், சர்.சிவசாமி அய்யர், நீதிபதி ஓல்டு பீல்டு உட்பட பலர் துணைவேந்தர்களாக பதவி வகித்துள்ளனர். "இன்றைய நிலையில், தரமான மனிதர்களை துணைவேந்தர்களாக நியமிக்கக்கூடிய சூழல் இல்லை" என மனுதாரர்கள் கூறுகின்றனர். எனவே, இத்துறையை சட்டத்தால் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us