தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியரின் மன உளைச்சலை தடுக்க: நடமாடும் ஆலோசனை வாகனம்

மாணவ, மாணவியரின் மன உளைச்சலை தடுக்க: நடமாடும் ஆலோசனை வாகனம்

மாணவ, மாணவியரின் மன உளைச்சலை தடுக்க: நடமாடும் ஆலோசனை வாகனம்


UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM

ADDED : ஜூலை 01, 2014 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM ADDED : ஜூலை 01, 2014 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி. உள்ளிட்ட மாணவ மாணவியர் மன உளைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் "கவுன்சலிங் மொபைல் வேன்" மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

தமிழக அளவில் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக சில ஆண்டு வரை தர்மபுரி மாவட்டம் இருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கையால், தற்போது தர்மபுரி மாவட்டம் கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. கடந்த, எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத்தேர்வில் மாநில அளவில் ஒன்பது பேர் முதலிடத்தையும், 13 பேர் இரண்டாவது இடத்தையும், 25 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதேபோல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் ஒரு மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். மேலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தந்தனர்.

எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டம், தேர்ச்சி சதவீதத்தில் பல மாவட்டங்களை பின்னுக்கு தள்ளியது. இதே நிலையை தக்க வைக்கும் கட்டாயத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியரை கசக்கி பிழியும் ஆசிரியர்களால் மாணவ மாணவியர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ. மகேஸ்வரி கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் மன உளைச்சலை தடுக்கும் வகையில் "கவுன்சலிங் மொபைல் வேன்" மூலம் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த வேனில் மனோதத்துவ நிபுணர் அடங்கிய குழுவினர் படங்கள், வீடியோ காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வாரத்தில் மூன்று நாள் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் 15 பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது. தனியார் பள்ளி மாணவர் மனநிலையை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us