தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்பில் நிராகரிப்பா? பதிலளிக்க உத்தரவு

இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்பில் நிராகரிப்பா? பதிலளிக்க உத்தரவு

இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்பில் நிராகரிப்பா? பதிலளிக்க உத்தரவு


UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM

ADDED : ஜூலை 02, 2014 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM ADDED : ஜூலை 02, 2014 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இலங்கை அகதியின் விண்ணப்பத்தை ஏற்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீபிரியா தாக்கல் செய்த பொதுநல மனு: இலங்கையில் நடந்த போரின் போது இந்தியா வந்து ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அகதிகள் முகாமில் ராஜா என்பவர் தங்கினார். இவர் மகள் நந்தினி. ஈரோடு மாவட்டம் நவரசம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 1,170 மதிப்பெண்கள் பெற்றார். கட் - ஆப் மதிப்பெண் 197.5 பெற்றார்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நந்தினி விண்ணப்பித்தார். கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டார். அங்கு சென்ற போது இலங்கை அகதி என்பதால் இவரை நிராகரித்து விட்டனர். இலங்கை அகதி என்ற பாகுபாட்டின் அடிப்படையில் நந்தினிக்கு அனுமதி மறுக்கப்பட்டது சட்ட விரோதமானது.

அகதிகளுக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகளை மீறுவது போல் உள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். படிப்பில் ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க உத்தரவிட வேண்டும். நந்தினியின் விண்ணப்பத்தை ஏற்று பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இம்மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் நோட்டீஸ் பெற்று கொண்டார். நந்தினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை, ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us