தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு துவங்கியது: சி.எஸ்.இ., இ.சி.இ. பாடப்பிரிவுகளில் ஆர்வம்

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு துவங்கியது: சி.எஸ்.இ., இ.சி.இ. பாடப்பிரிவுகளில் ஆர்வம்

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு துவங்கியது: சி.எஸ்.இ., இ.சி.இ. பாடப்பிரிவுகளில் ஆர்வம்


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை துவங்கியது. இன்று, கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 முதல் 198.75 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார். பின்னர் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார்.

முதல் 10 இடங்களைப் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு...

1. ஹரிதா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி
2. பிரபு - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி
3. ரவிசங்கர் - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை
4. விஷ்ணுபிரியா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி
5. ராமு - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி
6. சூர்ய மல்லிகராஜ் - மெக்கானிக்கல் - கிண்டி பொறியியல் கல்லூரி
7. பிரதிக்ஷா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி
8. ராகுல் பாலாஜி - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை
9. தர்ஷினி மீனா - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை
10. யோகராஜ் - மெக்கானிக்கல் - பி.எஸ்.ஜி. கல்லூரி கோவை.


10 பேரில் 5 பேர் சி.எஸ்.இ. பிரிவினையும், 3பேர் இ.சி.இ. பிரிவினையும் மற்றும் 2 பேர் மெக்கானிக்கல் பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் "உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சிறப்பாக இருப்பதால் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. கல்லூரியை தேர்ந்தெடுத்ததாக" மாணவர்கள் கூறினர். தொடர்ந்து இன்று இரவு 7 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர், கூடுதல் செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us