தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை: இணையதள வழி கலந்தாய்வு துவக்கம்

பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை: இணையதள வழி கலந்தாய்வு துவக்கம்

பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை: இணையதள வழி கலந்தாய்வு துவக்கம்


UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM

ADDED : ஜூலை 08, 2014 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM ADDED : ஜூலை 08, 2014 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சலிங் நேற்று துவங்கியது.

தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2014-2015ம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக ஒற்றைச் சாளர முறையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அல்லது அழைப்புக் கடித்தில் குறிப்பிட்டுள்ள மையத்தில் நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக கவுன்சலிங் நடக்கிறது.

அதன்படி சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சலிங் நேற்று துவங்கியது. சேலம் மாவட்டத்தில் 136 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றி கவுன்சலிங் நடக்க உள்ளது.

விண்ணப்பித்துள்ள அனைத்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் கீழ்க்கண்ட அசல் சான்றிதழ்களான பத்தாம் வகுப்பு, மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்றோர் சிறப்புப்பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us