தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலந்தாய்வு துவங்கிய ஒரு மணி நேரத்தில் மருத்துவ இடங்கள் நிரம்பின

கலந்தாய்வு துவங்கிய ஒரு மணி நேரத்தில் மருத்துவ இடங்கள் நிரம்பின

கலந்தாய்வு துவங்கிய ஒரு மணி நேரத்தில் மருத்துவ இடங்கள் நிரம்பின


UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM

ADDED : ஜூலை 08, 2014 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM ADDED : ஜூலை 08, 2014 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிற்கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ். கனவு தகர்ந்த மாணவர்களின் கவனம் ஆயுர்வேதம், கால்நடை அறிவியல் படிப்பு பக்கம் திரும்பியுள்ளது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்று துவங்கியது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காலியாக இருந்ததால் மற்ற பிரிவினர் ஏமாற்றம் அடைந்தனர். அதையடுத்து எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காத மாணவர்களின் கவனம் ஆயுர்வேதம், கால்நடை அறிவியல் படிப்பு பக்கம் திரும்பியது.

மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 42 இடங்களும், கால்நடை மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களும் இருந்தன. இதற்கான கவுன்சிலிங் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே இந்த இடங்கள் அனைத்து நிரம்பி விட்டன.

மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத படிப்பை தேர்ந்தெடுத்த மாணவி அருள்மொழி கூறுகையில் "பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1087 மதிப் பெண் எடுத்ததால் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். இந்தாண்டு அதிகம் பேர் மதிப்பெண் எடுத்துள்ளதால் எனக்கு எம்.பி.பி.எஸ். கிடைக்கவில்லை. ஆறுதல் அளிக்கும் விதத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு இணையான ஆயுர்வேத மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சவாலாக ஏற்று படிப்பேன்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us