தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பல்கலை துணைவேந்தருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு: பல்கலைக்கழக வக்கீல் விலகல்

மதுரை பல்கலை துணைவேந்தருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு: பல்கலைக்கழக வக்கீல் விலகல்

மதுரை பல்கலை துணைவேந்தருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு: பல்கலைக்கழக வக்கீல் விலகல்


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த வக்கீல் ஐசக் மோகன்லால் விலகிக்கொள்வதாக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என ஜூன் 26ல் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. நேற்று முன்தினம் பல்கலைக்கு வந்த கல்யாணி மதிவாணனுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளையில் பல்கலை சம்பந்தமான வழக்குகளில் வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜராகி வந்தார். இவர் துணைவேந்தருக்கு நேற்று எழுதிய கடிதம்:

துணைவேந்தருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மதுரை விமான நிலையத்திலிருந்து கார்கள் அணிவகுக்க துணைவேந்தரை பல்கலைக்கு அழைத்து வந்துள்ளனர். வரவேற்பு விளம்பர போர்டுகள் வைத்து, பட்டாசுகள் வெடித்துள்ளனர்.

பள்ளி நேரத்தில் மாணவர்களை வளாகத்தில் வெயிலில் நிறுத்தி மலர் தூவி துணைவேந்தருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அலுவலகத்தில் துணைவேந்தர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. துணைவேந்தருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட விதம், பல்கலை மகிமையை குறைக்கும் வகையில் உள்ளது. அதிகார தோரணையை வெளிப்படுத்துகிறது.

மதிப்புமிக்க கல்வியாளர்கள் உள்ள பல்கலையை, அரசியல் மேடையாக்கியதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. எனது மனசாட்சிப்படி பல்கலை வக்கீலாக தொடர விரும்பவில்லை. பல்கலை தொடர்பான வழக்குகளில் இனிமேல் ஆஜராவதிலிருந்து விலகிக்கொள்கிறேன். மாற்று ஏற்பாடு செய்து கொள்ளவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us