தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்த்தி வழங்கப்படாத ஊக்கத்தொகை - விளையாட்டு மாணவர்கள் அவதி

உயர்த்தி வழங்கப்படாத ஊக்கத்தொகை - விளையாட்டு மாணவர்கள் அவதி

உயர்த்தி வழங்கப்படாத ஊக்கத்தொகை - விளையாட்டு மாணவர்கள் அவதி


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், குறுமைய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதற்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதற்கு, முதலில் குறுமைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளுக்கு ஏற்படும் செலவில், குறிப்பிட்ட தொகையை ஊக்கத் தொகையாக அரசு வழங்குகிறது. தற்போதைய சூழலில் அத்தொகை, அவர்களின் தேவைக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அரசு தரப்பில் 20 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுக்கப்படுகிறது. இதில், போக்குவரத்து, உணவு, மற்ற தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினம். பல ஆண்டுகளாக இத்தொகையே கொடுக்கப்படுவதால், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

தற்போது கொடுக்கப்படும் தொகையும், கல்வியாண்டில், டிச., மார்ச் மாதங்களில் வருவதால், சொந்தப் பணம் அல்லது பள்ளி நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us