தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்பந்து விளையாட்டில் சாதிக்க ஆலோசனை தருகிறார் முன்னாள் வீரர் செல்லராஜ்!

கால்பந்து விளையாட்டில் சாதிக்க ஆலோசனை தருகிறார் முன்னாள் வீரர் செல்லராஜ்!

கால்பந்து விளையாட்டில் சாதிக்க ஆலோசனை தருகிறார் முன்னாள் வீரர் செல்லராஜ்!


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனது 12வது வயதில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தி, பள்ளி, கல்லுாரிகளில் சிறந்த வீரராக திகழ்ந்து, ஏழு முறை மாவட்ட அணியிலும், மூன்று முறை பல்கலை அணியிலும், இரண்டு முறை மாநில அணி சார்பிலும் தேசிய போட்டியிலும் விளையாடிய, முன்னாள் கால்பந்து வீரர் செல்லராஜ் சொல்வதை கேளுங்க...

சர்வதேச கால்பந்து சங்கத்தில், பதிவு பெற்ற 214 நாடுகளில், 32 நாடுகள் மட்டுமே உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு பெறுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 1930ல் இருந்து தற்போது, 20வது உலக கோப்பையாக நடந்து முடிந்தது. இந்தியா, 140வது இடத்தில் இருந்தாலும், சிறந்த அணி இங்கும் உள்ளது என்பது உண்மை.

ஆனால், 32 இடத்தில் ஒன்றாக என்று பங்கேற்குமோ என்பது சந்தேகம்தான். அது ஒருபக்கம் இருக்கட்டும்; உங்க வீட்டு குட்டி பையன் கால்பந்தில் சிறந்த வீரராக வேண்டுமானால் தன்னம்பிக்கையும், ஆர்வமும் சிறந்த பயிற்சியும் முக்கியமாக ஒழுக்கமும் அவசியம். தங்கள் வீட்டிலுள்ள, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கால்பந்து விளையாட்டில் இறக்கி விட்டால் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு தேசிய வீரராக, சர்வதேச அளவில் பிரகாசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு பெற்றோர்களின் உறுதுணையே மிகவும் முக்கியம். இதனால், எவ்விதத்திலும் படிப்பு பாதிக்காது, ஆனால், படிப்பில் மேலும் சிறந்து விளங்க முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.

வீரர்களுக்கு தனிப்பயிற்சி அவசியம்: மற்ற எல்லா விளையாட்டுகளை காட்டிலும் கால்பந்து மிகவும் விசேஷமானது. தலை முதல் கால் வரை உறுப்புகளை பயன்படுத்துவதே இந்த விளையாட்டின் சிறப்பு. ஒரு வீரர் தனக்கென சொந்தமாக ஒரு பந்தை வைத்து காலை, மாலையில் தனிப்பயிற்சி செய்து தன் ஆர்வத்தை வளர்த்து கொண்டாலே சாதிக்க முடியும். பின், குழுவில் இணைந்து விளையாடும் போது சூப்பர் வீரராக திகழ முடியும்.

பயிற்சியின் போது பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஓடுவது, இரண்டு அடிக்கு மேல் கீழே விடாமல் பந்தை தட்டுவது, உயரத்தில் துாக்கி போட்டு, நெஞ்சிலும், காலிலும் அப்படியே நிறுத்துவது போன்றவற்றால், பால் கன்ட்ரோல் கிடைக்கும். அதுவே, சிறந்த வீரராக உறுதுணையாக அமையும். போட்டியின் சக வீரர்களை காட்டிலும் சாதிக்கலாம். பின், ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு, பந்தை துாரத்தில் சரியானபடி, பாஸ் கொடுத்து பழகுவதும் அவசியம்.

தொடர்ந்து, உடற்பயிற்சி ஆசிரியர் மூலம் கால்பந்தின் பல நுணுக்கங்களை கற்று கொண்டு, பள்ளி அணியில் ஒருவராக தேர்வு பெறவும், எதிர்காலத்தில் சிறந்த வீரராகவும் சாதிக்கவும் முன்னோடியாக அமையும். பள்ளி பருவத்தை முடித்து, கல்லுாரியில் அணியிலும் சேர்ந்து தன் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் பல்கலை அணியில் விளையாடவும் வாய்ப்பு பெறலாம்.

அந்த வாய்ப்பின் பலனாக, பார்ம்-3 சான்றிதழ், தேசிய அணியில் பங்கேற்கும்போது, பார்ம்-2 சான்றிதழ் கிடைக்கும். வேலை வாய்ப்புக்கும் பயனுள்ளதாகவும் அமையும். சிறந்த விளையாட்டு வீரராக ஒழுக்கம் அவசியம். விளையாட்டு மூலம் சமுதாயத்தில் வேலை வாய்ப்பும், நன்மதிப்பும் பெறமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us