நாட்டின் அனைத்து குடிமக்களும் இ-நூலகத்தால் பயன்பெறலாம்: ஸ்மிருதி இரானி
நாட்டின் அனைத்து குடிமக்களும் இ-நூலகத்தால் பயன்பெறலாம்: ஸ்மிருதி இரானி
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 12:05 PM
புதுடில்லி: தேசிய எலக்ட்ரானிக் நூலகம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனாலும் பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும் என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் இதர தரப்பினர் அனைவரும், எந்த தடங்கலும் இன்றி, தேசிய எலக்ட்ரானிக் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் மற்றும் இதர பலவிதமான சாதனங்களின் மூலம், இந்த நூலகத்தை அணுகலாம்.
அதேசமயம், சிலவிதமான content -கள், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மட்டுமானதாகும்.
கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட National Repository of Open Education Resources (NROER) என்பதும், இ-நூலகத்தின் ஒரு பகுதியே. இவ்வாறு அவர் கூறினார்.
