தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக் கல்லூரிகள் பூகோள விகிதாச்சார முறையில் அமையவில்லை: அமைச்சர் ஹர்ஷவர்தன்

மருத்துவக் கல்லூரிகள் பூகோள விகிதாச்சார முறையில் அமையவில்லை: அமைச்சர் ஹர்ஷவர்தன்

மருத்துவக் கல்லூரிகள் பூகோள விகிதாச்சார முறையில் அமையவில்லை: அமைச்சர் ஹர்ஷவர்தன்


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்களவையில் அவர் இதுதொடர்பாக கூறியதாவது: நாடெங்கிலும் சரியான பூகோள விகிதாச்சார முறைப்படி, மருத்துவக் கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. இதனால், அனைத்து மக்களுக்கும் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கும் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் மறுஆய்வு செய்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், மருத்துவக் கல்வி நிறுவனங்களை, சரியான விகிதாச்சார முறையில் அமைப்பதற்கு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலைப் பகுதிகள், பழங்குடியினர் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகள், டாமன் அன்ட் டயூ, தாதர் அன்ட் நாகர் ஹவேலி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில், 10 கி.மீ. தூரத்திற்கு மிகாமல், ஒரு நிலத்தின் இரண்டு தனியான இடங்களில், மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடியும்.

ஏற்கனவே இயங்கிவரும் மாவட்ட மருத்துவமனைகளோடு இணைந்த முறையில், புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக, மத்திய நிதியுதவி திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us