இலக்கியங்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு
இலக்கியங்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 11:45 AM
அ நிறம் | அளவு
சென்னை: அடையாறு பெட்ரீசியன் கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை, பாரதிதாசன் தமிழ் இலக்கிய பேரவை இணைந்து, அடுத்த மாதம் 26ம் தேதி, இலக்கியங்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்த உள்ளன.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், முதுகலை மாணவர்கள், ஆய்வு கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரைகள் நான்கு பக்க அளவில், வெள்ளை தாளில் தட்டச்சு செய்தோ, குறுந்தகடாகவோ, patriciantamil@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 044 - 2447 5342, 87542 79299 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, துறை தலைவர் அகிலா சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
