தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த திட்ட அலுவலர் விருது!
தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த திட்ட அலுவலர் விருது!
UPDATED : நவ 01, 2014 12:00 AM
ADDED : நவ 01, 2014 11:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம், அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு அதிகமுறை ரத்தம் வழங்கியது, முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற சிறார் இல்லங்களுக்கு சென்று உதவிகள் செய்வது, எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் பல்வேறு சமூக சேவைகளை பொது மக்களுக்கு வழங்கியது ஆகியவற்றைப் பாராட்டி கல்லூரியின் பேராசிரியரும் திட்ட அலுவலருமான ஆர். நாகராஜனுக்கு மாநில அளவிலான சிறந்த திட்ட அலுவலர் விருது வழங்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் நடந்த விழாவில் பல்கலை கழக துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் வழங்கினார். கல்லூரி செயலர் ராஜ்குமார், முதல்வர் ரவிக்குமார், துணை முதல்வர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

