தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"மனிதன் காங்கிரீட் வீட்டிற்கு மாறியதால், குருவிகள் வாழுமிடத்தை மாற்றி விட்டன"

"மனிதன் காங்கிரீட் வீட்டிற்கு மாறியதால், குருவிகள் வாழுமிடத்தை மாற்றி விட்டன"

"மனிதன் காங்கிரீட் வீட்டிற்கு மாறியதால், குருவிகள் வாழுமிடத்தை மாற்றி விட்டன"


UPDATED : நவ 30, 2014 12:00 AM

ADDED : நவ 30, 2014 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2014 12:00 AM ADDED : நவ 30, 2014 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஓட்டு வீட்டில் வாழ்ந்த மனிதன் இன்று காங்கிரீட் வீட்டிற்கு மாறியதால், குருவிகள் தங்கள் வாழுமிடத்தை மாற்றி விட்டன, என பறவைகள் ஆர்வலர் டாக்டர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

மதுரையில் குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது குறித்து தினமலர் நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டது. தற்போது பறவை ஆர்வலர்களின் முயற்சியால் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பறவை ஆர்வலர் டாக்டர் பத்ரி நாராயணன் கூறியதாவது: குருவிகள் குறைய மொபைல் போன் டவர் கதிர்வீச்சு மட்டும் காரணம் அல்ல. அக்கதிர்வீச்சுகள், குருவிகளை அதிகம் பாதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மனிதன் முன்பு ஓட்டு வீட்டில் குடியிருந்தான். அப்போது ஓட்டிற்கும் மரச்சட்டங்களுக்கும் இடையில் உள்ள இடுக்குகளில் குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன.

அதேபோல, முன்பு அரிசி உட்பட உணவுப் பொருட்கள் சாக்கு மூடைகளில் கொண்டு வரப்பட்டன. அப்போது சிந்தும் உணவுப் பொருட்களை குருவி உட்பட பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. தற்போது பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதால் சிந்த வாய்ப்பு குறைவு. தற்போது குருவிகள் விமானநிலையங்கள் போன்ற உயரமான கூரைகள் கொண்ட கட்டடங்களை தங்கள் வாழிடங்களாக மாற்றிக்கொண்டுள்ளன.

மதுரை நேச்சர்ஸ் போரம் என்ற அமைப்பை அண்மையில் வன அதிகாரி நிஹார்ரஞ்சன் துவக்கி வைத்தார். வாரம்தோறும், ஞாயிறு அன்று இக்குழுவினர் பறவைகளை கணக்கெடுக்கின்றனர். கடந்த வாரம் குன்னத்தூர், வெள்ளிமலை பகுதிகளில் கணக்கெடுத்தோம். இன்று மாடக்குளம், தென்கால் கண்மாய் ஆகியவற்றில் கணக்கெடுக்க உள்ளோம். மார்ச், ஏப்ரல் வரை இக்கணக்கெடுப்பு இருக்கும்.

அவனியாபுரம் கண்மாயில் ஆண்டு முழுதும் பறவை கண்காணிப்பு நடத்த உள்ளோம். மலேசியாவில் உள்ள ஏசியன் வெட் லேண்ட் பீரோ என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஜனவரி 10 முதல் 25 ம் தேதி வரை நீர்நிலைகளில் பறவையினங்கள் கணக்கெடுப்பை நடத்துகிறது. அதேபோல இங்கும் நடத்தலாம். பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் 86082 66088 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us