தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லூரி அருகே மருத்துவமனையின் பிணவறைக் கட்ட கடும் எதிர்ப்பு

பள்ளி, கல்லூரி அருகே மருத்துவமனையின் பிணவறைக் கட்ட கடும் எதிர்ப்பு

பள்ளி, கல்லூரி அருகே மருத்துவமனையின் பிணவறைக் கட்ட கடும் எதிர்ப்பு


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பள்ளி மற்றும் கல்லுாரி அருகே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவ துறை மற்றும் பிணவறைக்கான புதிய கட்டடத்துக்கு அரசு, 1.82 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது.

டாக்டர்கள் உட்பட பலரும் தற்போதுள்ள இடத்திலேயே புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, தெரிவித்த நிலையில், ஒரு சிலர் பழைய ஆர்.எம்.ஓ., குடியிருப்பில் கட்ட வலியுறுத்தினர்.

தற்போது பிணவறை செயல்பட்டு வரும் இடத்தில் கட்டடம் கட்ட, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கலைக் கல்லுாரியின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே உள்ள மருத்துவமனை வளாகத்தில், இதற்கான கட்டுமான பணிகள் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி சார்பில் இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பணிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பிணவறை கட்டடத்துக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். செயின்ட் மேரிஸ், செயின்ட் ஜோசப், செயின்ட் பிரான்சிஸ் ஆகிய பள்ளிகளில், 6,000க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இம்மாணவிகளின் பெற்றோர்கள், மருத்துவமனையின் இச்செயலால் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளி சார்பில் நடந்த கூடத்தில் கலந்துகொண்ட பெற்றோர், இதை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. பள்ளி சார்பில், சட்டரீதியாக போராடலாம் என தெரிவித்தபோதும், பெற்றோர்கள் அதை மறுத்து நேரடி போராட்டத்தில் இறங்க வலியுறுத்தினர். பெற்றோர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் கல்லுாரி மாணவர்களின் அதிருப்திக்கு நடுவே தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி, கூறியதாவது: தற்போது மாலிக்குலர் வைராலாஜி லேப் மற்றும் மார்ச்சுவரி கட்டடம் கட்டும் பணிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அரசு மருத்துவமனைக்கும் குடியிருப்பு, பள்ளிக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதால், அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், மார்ச்சுவரி யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் திட்டம் தீட்டப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

புதிய மார்ச்சுவரி மூன்று தளங்கள் கொண்ட கட்டடமாக இருக்கும். பிரேதப் பரிசோதனை உட்பட அனைத்து பணிகளும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அரசு மருத்துவமனையில் கட்டடம் கட்ட, அரசு அனுமதியளித்துள்ளது. அப்பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்ப்புக்கு என்ன காரணம்?

பள்ளி அருகே பிணவறை கட்டடத்துக்கு ஆரம்பம் முதல் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பள்ளி அருகே இக்கட்டடம் அமைவதால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். பிணவறை முன் அடிக்கடி தர்ணா, முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடப்பதால், குறுகலான அரசு கலைக் கல்லுாரி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், பிரதான சாலை அருகே பிணவறை இருந்தால் மட்டுமே அங்கு ஏற்படும் நெரிசலை சாமாளிக்க முடியும் என, பல்வேறு காரணங்களை தெரிவித்து போராட, பெற்றோர் களம் இறங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us