கழிவுநீர் கால்வாய்கள் நடுவே திறந்த வெளியில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு
கழிவுநீர் கால்வாய்கள் நடுவே திறந்த வெளியில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு
UPDATED : டிச 10, 2014 12:00 AM
ADDED : டிச 10, 2014 12:08 PM
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால், அருகிலுள்ள மாநகராட்சி கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அங்கு தண்ணீர் வசதி இல்லை. பள்ளி கட்டடம் எதிரே கழிப்பறை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் பகுதியில் திறந்தவெளியில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கப்படுகிறது. மழை பெய்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சமைக்கும் இடத்தின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. சமையல் செய்வதற்கு வேறு இடம் இல்லாததால் அங்கு சமைக்கப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பிச்சை கூறுகையில், &'&'பள்ளி வளாகத்திற்குள் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு சமையலுக்கு இடம் இல்லை. அருகில் கோயிலுக்கு சொந்தமான இடம்தான் உள்ளது. இடம் வழங்க கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. சத்துணவு சமைப்பதற்காக இடம் கிடைத்தால் ஊராட்சி நிதியிலிருந்து கட்டடம் கட்டப்படும்"என்றார்.
