தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காரைக்குடி சிக்ரியில் சி.எஸ்.ஐ.ஆர். மண்டல அளவிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டி

காரைக்குடி சிக்ரியில் சி.எஸ்.ஐ.ஆர். மண்டல அளவிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டி

காரைக்குடி சிக்ரியில் சி.எஸ்.ஐ.ஆர். மண்டல அளவிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டி


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: சி.எஸ்.ஐ.ஆர்., மண்டல அளவிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டி, காரைக்குடி சிக்ரியில் டிச.26 முதல் 28 வரை நடக்கிறது.

இந்தியாவில் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) சார்பில், 37 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆராய்ச்சி கூடங்களுக்குரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே, மூன்று மண்டலங்களுக்கு முடிந்த நிலையில், நான்காவது மண்டலங்களுக்கு உரிய உள்ளரங்க போட்டிகள், காரைக்குடி சிக்ரியில் வருகிற 26 முதல் 28 வரை நடக்கிறது. இதில் மைசூர், கோவா, ஜம்மு, பாலம்பூர், பிலானி, டில்லி, கொல்கத்தா, ஜோர்காட், லக்னோவில் உள்ள ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த 159 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கேரம், செஸ், டேபிள் டென்னிஸ், இறகு பந்து, பிரிட்ஜ் எனப்படும் கார்டு விளையாட்டு நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் சிக்ரி வளாகத்திலும், இறகு பந்து அழகப்பா உடற்கல்வியல் கல்லூரியிலும் நடக்கிறது என ஒருங்கிணைப்பாளர் மோகன், செயலாளர் நவீன் சந்திரசேகர், பொருளாளர் காளிதாஸ் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us