தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகள் பிச்சை எடுப்பதை முற்றிலும் ஒழிக்க களமிறங்கிய மாவட்ட நிர்வாகம்

குழந்தைகள் பிச்சை எடுப்பதை முற்றிலும் ஒழிக்க களமிறங்கிய மாவட்ட நிர்வாகம்

குழந்தைகள் பிச்சை எடுப்பதை முற்றிலும் ஒழிக்க களமிறங்கிய மாவட்ட நிர்வாகம்


UPDATED : டிச 22, 2014 12:00 AM

ADDED : டிச 22, 2014 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2014 12:00 AM ADDED : டிச 22, 2014 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி: குழந்தைகள் பிச்சை எடுப்பதை முற்றிலும் ஒழிக்க, அவர்களது குடும்ப வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், திட்டம் உருவாக்கி, அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

அதற்காக, முதற்கட்டமாக ஐந்து இடங்கள் தேர்வு செய்யபட்டுள்ளன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், குழந்தைகள் பிச்சை எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டுமானால், அவர்களின் குடும்ப வருவாய்க்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் என, ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, வருவாய், சுகாதாரத் துறையினருடன் இணைந்து, குழந்தைகள் பிச்சை எடுப்பதை ஒழிக்க, குழந்தைகள் நலத்துறை, புதிய திட்டத்துடன் களம் இறங்கி உள்ளது.

திட்டம் மூலம்...

* சுயதொழில் மூலம், தினசரி வருவாய் ஈட்டுவதற்கான நிதியுதவி ஏற்படுத்தி தருதல்
* பிச்சை எடுப்பவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தருதல்
* குடியிருப்புக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருதல்
* மருத்துவ பரிசோதனை செய்தல் மற்றும் கவுன்சிலிங் கொடுத்தல்
* மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், பயனாளிகளாக சேர்த்தல்
* குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை பெற்று தருதல்
* பெற்றோர், காப்பாளர் இல்லாத குழந்தைகளை அரசு காப்பகங்களில் ஒப்படைத்தல்

ஐந்து இடங்களில்...

குழந்தைகள் பிச்சை எடுப்பது குறித்து, மாவட்டம் முழுவதும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, அனுப்பம்பட்டு, பாக்கம், முந்திரிதோப்பு, பெரியகுப்பம், தாமரைப்பாக்கம் ஆகிய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட ஐந்து இடங்களில், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட வசதிகளை செய்து தர, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்காணிக்க, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நல அலுவலர், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட புதுவாழ்வு திட்ட அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர் ஆகியோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்மாதிரி திட்டம்

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரி சையத் ரவுப் கூறுகையில், "பிச்சை எடுக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு, புது வாழ்வு திட்டத்தின் மூலம், கறவை மாடு வழங்குதல், பெட்டிக் கடை வைக்க, சுயதொழில் துவங்க என, அவர்கள் தினசரி வருவாய் ஈட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதையும் மீறினால், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில், மாவட்ட ஆட்சியர் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இத்திட்டம் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமையும்" என்றார்.

பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டாலோ, அவர்கள் குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடங்கள் விவரம் தெரிந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசியில் தெரிவிக்க, பகுதிவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

சைல்ட் லைன்  -  1098, 044 -2766 4607
மாவட்ட குழந்தைகள்  -  94445 16987, 044- 2766 5595
பாதுகாப்பு அலுவலர் சேவாலயா  -  94447 93505
ஐ.ஆர்.சி.டி.எஸ்.,  -  94434 17433, 044 2766 0084
ஜீவஜோதி  -  96771 48783
பாலகுருகுலம்  -  98849 76889
சைல்டு லைன்  -  98416 56103 99416 43056
தளம்  -  94445 63001

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us