தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பழங்கால நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மீடியாக்கள் முன்வர வேண்டும்’

‘பழங்கால நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மீடியாக்கள் முன்வர வேண்டும்’

‘பழங்கால நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மீடியாக்கள் முன்வர வேண்டும்’


UPDATED : ஜன 03, 2015 12:00 AM

ADDED : ஜன 03, 2015 08:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2015 12:00 AM ADDED : ஜன 03, 2015 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்பகமாக தகவல்கள்:

தஞ்சை தமிழ் பல்கலையில், நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: பழங்கால நாணயங்கள் குறித்து, சுருக்கமாகக் கூறுவதென்றால், கடந்த கால வரலாறுகளை, நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சமீப காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்கள், வரலாற்றை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது. நாணயங்கள் மூலம் கிடைக்கும் நம்பகமான தகவல்களை கொண்டு, வரலாற்றை எழுதலாம்.

நாணயங்கள் என்பது, நாகரிக சமூகத்தின் அடையாளமாகவும், அரசு உருவாக்கத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. கடந்த நூற்றாண்டு வரை, சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களை, குறுநில மன்னர்களாகத் தான், வடநாட்டு ஆய்வாளர்கள் கருதினர். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம், இவர்கள் அரசாட்சி நடத்தியவர்கள் என்பது தெளிவானது. நாணயங்களை ஆதாரமாகக் கொண்டு, நமது வரலாறுகள் உருவாக்கப்படாததால் தான், அவர்கள் அப்படி கருதினர்.

இந்நிலையில், தென்னிந்திய நாணயவியல் கழகம், சங்க கால தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த நாணயங்கள் முதல், சங்க கால சேரர், சோழர், பாண்டியர் உள்ளிட்ட, 18ம் நூற்றாண்டு வரையிலான நாணயங்களை சேகரித்து, ஆய்வு செய்ததோடு, அவற்றை புதுப்பித்து, கடந்த, 25 ஆண்டுகளில், மிகப்பெரும் வரலாற்றுப் பணிகளை நிறைவேற்றியது.

மணல் கொள்ளையர்கள்:

பழங்கால நாணயங்கள் பெரும்பாலும், ஆறுகளில் இருந்து தான் கிடைக்கின்றன. குறிப்பாக, கரூர் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து, சங்க கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்படிப்பட்ட நாணயங்களை, 20 ஆண்டுகளாக, மணல் கொள்ளையர்கள் அழித்துவிட்டனர். பழங்கால நாணயங்கள் வரலாற்று பொக்கிஷங்கள் என்பதால், அவற்றை அழிக்கவோ, உருக்கவோ கூடாது; அவை, பாதுகாக்கப்பட வேண்டும். இதுகுறித்து, செய்திகள் மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ’மீடியா’க்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us