தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிசம்பர் வரை விளையாட்டை நோக்கி ஓடுகின்றனர்; விளையாட்டு ஓய்ந்ததும் படிப்பு!

டிசம்பர் வரை விளையாட்டை நோக்கி ஓடுகின்றனர்; விளையாட்டு ஓய்ந்ததும் படிப்பு!

டிசம்பர் வரை விளையாட்டை நோக்கி ஓடுகின்றனர்; விளையாட்டு ஓய்ந்ததும் படிப்பு!


UPDATED : ஜன 21, 2015 12:00 AM

ADDED : ஜன 21, 2015 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2015 12:00 AM ADDED : ஜன 21, 2015 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: டிசம்பர் வரை விளையாட்டை நோக்கி ஓடுகின்றனர்; விளையாட்டு ஓய்ந்ததும் படிப்பை நோக்கி படையெடுக்கின்றனர் மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

படிப்புக்கும், விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் தந்து மாணவர்களின் உடற்திறனை மேம்படுத்தும் பணியை செய்கிறது இப்பள்ளி. தடகள வீரர்களாக, கால்பந்து, வாலிபால், கூடைபந்து வீரர்களாக மாநில, தேசியஅளவில் ஜொலிக்கின்றனர் இம்மாணவர்கள்.

"நானும் ஒரு கால்பந்து வீரர்தான்; அதனால்தான் விளையாட்டையும், வீரர்களையும் மதிக்கிறேன்" என்கிறார் தலைமையாசிரியர் ஆண்டனி சேவியர் பிரிட்டோ. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உலகத் தடகள திறனாய்வு போட்டிகள் நடத்துகிறோம். மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனை இந்த வயதிலேயே கண்காணிக்க வேண்டும்.

ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, எந்த விளையாட்டுக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வுசெய்து, வீரர்களாக்குகிறோம். மாணவர்கள் படித்து முடித்து இங்கிருந்து செல்லும்போது, ஒழுக்கமானவர்கள் என்ற பட்டத்தோடு உடற்தகுதி வாய்ந்தவர் என்றும் சொல்ல வேண்டும் என்றார்.

உடற்கல்வி இயக்குனர் செல்லப்பா, உடற்கல்வி ஆசிரியர் ஜான் பென்னி விக்டர் கூறியதாவது: எங்கள் மாணவர்கள் அடித்தட்டு நிலையில் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு விளையாட்டுகளின் மூலம் நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறோம். பத்தாம் வகுப்போ, பிளஸ் 2 -வோ மாணவர்களின் விளையாட்டுத் திறனுக்கு வகுப்பாசிரியர்கள் மதிப்பு தருகின்றனர்.

அதனால் டிச., வரை விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி தருகின்றனர். வெறும் விளையாட்டு மட்டும் போதாதே. அதனால் மதிப்பெண் குறைவாக பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மாலையில் ஆறு முதல் இரவு வரை, பாடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம்.

இதற்காக அனைத்து மரத்தடிகளிலும் டியூப்லைட்கள் அமைத்துள்ளோம். ஆசிரியர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு, மாணவர்களுக்கு மாலையில் டிபன் வழங்குகிறோம். தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் அனைவருமே வீரர்களின் படிப்புக்கு உதவி செய்கிறோம்.

சூப்பர் சீனியர் பிரிவு கூடைபந்து வீரர்களுக்கு, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி இலவசமாக சீட் வழங்குகிறது. கால்பந்து வீரர்களுக்கு கோவை காருண்யா பல்கலை, பி.எஸ்.என்.ஏ., சேது இன்ஸ்டிடியூட், சென்னை ஜெ.பி.ஆர்., கல்லுாரிகள் இலவச சீட் தருகின்றன. கால்பந்து, கூடைபந்தில் நாங்கள் சாதித்தாலும் வாலிபால் போட்டியில் ஜெயிக்கவில்லை.

பயிற்சியாளர்கள் சிவராஜன், எட்வின் முயற்சியால் 18 ஆண்டுகள் கழித்து மாநில சாம்பியன் ஆனோம். தடகள பயிற்சியாளர்கள் குப்பேஸ்வரன், ராஜாமணி முயற்சியால் இந்தாண்டு மாநில தடகளப் போட்டிகளில் அதிக பதக்கங்களை குவித்தோம். இங்கிருந்து மாணவர்கள் செல்லும்போது, படிப்பும், விளையாட்டும் கைகொடுக்க வேண்டும். அதுதான் எங்கள் விருப்பம் என்றனர். வாழ்த்த: 96264 68009.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us