தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் கமிஷனர் வெளிநடப்பால் பரபரப்பு

சென்னை பல்கலை ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் கமிஷனர் வெளிநடப்பால் பரபரப்பு

சென்னை பல்கலை ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் கமிஷனர் வெளிநடப்பால் பரபரப்பு


UPDATED : ஜன 25, 2015 12:00 AM

ADDED : ஜன 25, 2015 01:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2015 12:00 AM ADDED : ஜன 25, 2015 01:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையின், ஆட்சி மன்ற குழுக் கூட்டம் கூடிய சிறிது நேரத்தில் தொழிற்கல்வி இயக்ககத்தின் கமிஷனர் பிரவீன்குமார் வெளிநடப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்கலையின், ஆட்சிமன்ற குழு கூட்டம், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு துவங்கியது. அதில், அரசின் உறுப்பினராக பங்கேற்ற, தொழிற்கல்வி இயக்ககத்தின் கமிஷனர் பிரவீன் குமார் பேசியதாவது: நேனோ தொழில்நுட்ப துறை, நேனோ அறிவியல் துறைகளுக்கு, 16 பேராசிரியர்கள் நியமித்தது உட்பட, பல்வேறு செயல்பாடுகளில், பல்கலை, தமிழக உயர்கல்வி, பல்கலை மானிய குழுவின் சட்டங்கள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்து இருக்கின்றன. 
அவற்றை விசாரிக்க, ஆட்சிமன்ற குழுவின், தனி குழு அமைக்க வேண்டும். அதை வலியுறுத்தி, நானும், முன்னாள் உயர்கல்வி செயலர் ஹேமந்த்குமார் சின்ஹாவும், கடந்த கூட்டங்களில் கடிதம் கொடுத்தோம். அதற்கு, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? கடந்த சில கூட்டங்களில், நாங்கள் தெரிவித்த, தெரிவிக்காத கருத்துக்கள், திரிக்கப்பட்டு ஆட்சிமன்ற குழு கூட்டத்தின் தீர்மான அறிக்கையில் வெளியிடப்பட்டு இருந்தன. அவற்றையும், சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கைகள் வைத்தோம். அவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? இவ்வாறு, அவர் பேசினார்.
அதற்கு பதிலளித்து துணைவேந்தர் இரா.தாண்டவன் பேசியதாவது: பேராசிரியர் நியமனங்கள், பல்கலை விதிகளுக்கு உட்பட்டு, முறைப்படியே நடந்துள்ளன. அவற்றின், உண்மை தகவல்கள், விரைவில் பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதனால், குழு அமைக்க தேவையில்லை. அதற்கு, பல்கலை சட்டத்தில் இடமில்லை. மேலும், உங்கள் கடிதம் முறைப்படி இல்லாமல், காலதாமதமாக கிடைத்தது. அதனால், அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
அதிருப்தி அடைந்த பிரவீன்குமார், பல்கலை சட்டத்தில், தனி குழு அமைக்க, இடம் உள்ளது எனக் கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, பல்கலை ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், இதே கருத்தை வலியுறுத்தினர். ’நாங்கள் முறைப்படி கடிதம் அளித்தோம்; அவற்றிற்கு, விளக்கம் அளிக்க வேண்டும்’ எனக் கூறி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், அதற்கு அவசியம் இல்லை என, துணைவேந்தர் கருத்து தெரிவித்து, உயர்கல்வி துறை செயலர் அபூர்வாவின் முன்னிலையில், அடுத்தடுத்த தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இதுவே முதல் முறை!

சென்னை பல்கலை வரலாற்றில், ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இருந்து, ஒரு அரசு உறுப்பினர் வெளிநடப்பு செய்தது, இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதற்கு விளக்கம் கேட்டு, முன்னாள் உயர்கல்வி செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, கடிதம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில், தற்போதைய உயர்கல்வி துறை செயலர் அபூர்வா, இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருவது பல்கலை வட்டாரத்தில், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us