தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களை தேர்வுசெய்ய பொதுத்துறை வங்கிகளை அனுமதிக்க வேண்டும்"

"ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களை தேர்வுசெய்ய பொதுத்துறை வங்கிகளை அனுமதிக்க வேண்டும்"

"ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களை தேர்வுசெய்ய பொதுத்துறை வங்கிகளை அனுமதிக்க வேண்டும்"


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: இந்திய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.,), இந்திய மேலாண்மை மையம் (ஐ.ஐ.எம்.,) ஆகியவற்றின் மாணவர்களை பணிக்கு தேர்வுசெய்ய, பொதுத் துறை வங்கிகளை அனுமதிக்க வேண்டும் என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகள் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் வளாக தேர்வு நடத்தி, மாணவர்களை பணிக்கு தேர்வு செய்ய, சுப்ரீம் கோர்ட் அண்மையில் தடை விதித்துள்ளது. காலியிடங்களுக்கு விளம்பரம் வாயிலாகவே தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., களை உருவாக்க பெருமளவு அரசு பணம் செலவிடப்படுகிறது. இந்த மையங்களில் இருந்து தலைசிறந்த மாணவர்கள் வெளிவருகின்றனர். அத்தகையோர், வங்கிகளின் வளர்ச்சிக்கு துணை புரிவர்.

குடிமக்களின் வரிப் பணத்தில் அமைக்கப்படும் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., அமைப்புகளில் இருந்து வெளிவரும் திறமையானவர்களை, அரசு வங்கிகள் தேர்வு செய்யக்கூடாது என்று கூறும் நம்நாடு குறித்து, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இதனால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் அதிக வேறுபாடு காணப்படுகிறது. இத்தகைய சூழலிலும், பொதுத் துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மாணவர்களை தேர்வுசெய்ய அனுமதித்தால், தற்போதுள்ளதை விட, பொதுத் துறை வங்கிகள் மேலும் சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us