தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பலவிதமான சுகாதார சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி

பலவிதமான சுகாதார சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி

பலவிதமான சுகாதார சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி


UPDATED : பிப் 04, 2015 12:00 AM

ADDED : பிப் 04, 2015 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2015 12:00 AM ADDED : பிப் 04, 2015 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிட்லப்பாக்கம்: சிட்லப்பாக்கத்தில், குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால், அரசு பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்கு ஆண்டு, குறைந்து வருகின்றன.

சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம், சிட்லப்பாக்கம் ஏரி கரையில் உள்ளது. சிட்லப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை, பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி ஏரி கரையில் கொட்டப்படுகிறது.

பிரச்னை என்ன?

அந்த குப்பை கிடங்கை ஒட்டி, அரசு உயர்நிலை பள்ளி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி திட்ட அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன. குப்பை கிடங்கில் இருந்து எழும் புகையால், அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படும் துயரம் சொல்லி தீராது.

* ஒவ்வொரு முறையும் குப்பை கிடங்கில், மர்மநபர்கள், தீயிட்டு கொளுத்தும் போது எழும், புகை மூட்டம் பள்ளியை முழுவதுமாக சூழ்ந்து விடுகிறது.
* அதனால், மாணவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், தலை சுற்றல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
* புகை மூட்டத்திலேயே மதிய உணவு தயார் செய்யப்படுகிறது; குப்பை நாற்றத்திலேயே மாணவர்கள் அந்த உணவை சாப்பிடுகின்றனர்.
* குப்பை கிளறி விடப்படும்போது, தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. அதனால், மாணவர்கள் வாந்தி எடுத்து, மயக்கம் அடைகின்றனர். ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
* பறவைகள், இறைச்சி கழிவுகளை, பள்ளி வளாகத்திற்குள் துாக்கி வந்து போடுகின்றன. பள்ளி வளாகத்திற்குள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.
* புகை மூட்டத்திற்கு பயந்து கொண்டு, தினசரி, பாதி மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.

கண்டுகொள்ளவில்லை

இந்த பிரச்னையின் நிகர விளைவாக, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை, மிக மோசமான அளவிற்கு குறைந்து விட்டது. 2011-12ம் கல்வி ஆண்டில், 400 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, நடப்பு 2014-15ம் கல்வி ஆண்டில், வெறும் 170 ஆக குறைந்துவிட்டது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், அமைச்சர், பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், கல்வி துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும், இதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன் 400 மாணவர்கள் படித்தனர். தற்போது, 170 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புகை மூட்டம், துர்நாற்றத்திற்கு பயந்து கொண்டு, கணிசமான மாணவர்கள், சான்றிதழ் வாங்கி கொண்டு, அருகேயுள்ள பள்ளியில் சேருகின்றனர்.

ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி, சிட்லப்பாக்கம்

புகை மூட்டத்தால், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தில், பாதி பணம் மருத்துவ செலவிற்கே சென்று விடுகிறது. சிட்லப்பாக்கம் பேரூராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலைமை ஏற்படும்.

பள்ளி நிர்வாகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us