தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது: மாவட்ட ஆட்சியர் வேதனை

இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது: மாவட்ட ஆட்சியர் வேதனை

இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது: மாவட்ட ஆட்சியர் வேதனை


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது, என, மாவட்ட ஆட்சியர் வேதனை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், மாணவர்களுக்கான தொழில்முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகம் பேசியதாவது: இன்றைய கால இளைஞர்களிடம், வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. வாசிக்கும் பழக்கம், ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். வாசிப்பு என்பது நேசிப்பாக மட்டுமல்லாமல், சுவாசிப்பாகவும் இருக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவுக்கு, அன்று அறுவை சிகிச்சை நாள்.

ஆனால், அறுவை சிகிச்சையை ஒருநாள் தள்ளிவைக்க முடியுமா என, மருத்துவரிடம் அவர் கேட்டுள்ளார். ஏன் என்று மருத்துவர் கேட்டுள்ளார். அதற்கு அவர், 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை படித்து வருகிறேன்; அதில், 100 பக்கங்கள் இன்னும் படிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒருநாள் அறுவை சிகிச்சையை தள்ளிவைக்க வேண்டும், என்றார். அந்த அளவிற்கு, அண்ணாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது.

வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், இளைஞர்கள் எந்த லட்சியத்தையும் அடைய முடியும். ஒரு மனிதன் எப்படி பிறக்கிறான் என்பது பிரச்னை இல்லை; ஆனால், அவன் எப்படி இறக்கிறான் என்பதற்கு அவனே காரணம். எனவே, மாணவர்களாகிய நீங்கள், உங்கள் வாழ்க்கையை வசப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us