தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்; காலி இடங்களை நிரப்ப முயற்சி

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்; காலி இடங்களை நிரப்ப முயற்சி

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்; காலி இடங்களை நிரப்ப முயற்சி


UPDATED : அக் 01, 2015 12:00 AM

ADDED : அக் 01, 2015 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2015 12:00 AM ADDED : அக் 01, 2015 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. 

இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர். இதனால், 928 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பவில்லை. இந்த காலி இடங்களை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் அடங்கிய, புதிய முன்னுரிமை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
 

பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் இடையே, சலுகை, சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. பதவி உயர்வை ஏற்றால், வேறு ஊருக்கு மாற்றலாக வேண்டுமே என பயந்து, பதவி உயர்வை வேண்டாம் என உதறி விடுகின்றனர். விரைவில் நடத்த உள்ள பதவி உயர்வு கலந்தாய்விலும், அனைத்து இடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

காலியிடங்கள் விவரம்

தமிழ் 100

ஆங்கிலம் 160

கணிதம் 80

இயற்பியல் 100

வேதியியல் 70

தாவரவியல் 63

விலங்கியல் 70

வரலாறு 143

வணிகவியல் 73

பொருளியல் 69 

மொத்தம் 928

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us