’நா பாவம் நா புண்ணியம்’ நிகழ்ச்சியுடன் ’வித்யா வாஹினி’ நிறைவு
’நா பாவம் நா புண்ணியம்’ நிகழ்ச்சியுடன் ’வித்யா வாஹினி’ நிறைவு
UPDATED : நவ 18, 2015 12:00 AM
ADDED : நவ 18, 2015 04:49 PM
ஆந்திரா
: ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் 90-வது பிறந்தளாலை கொண்டாடும் வகையில், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் ’ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி’ நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சியின் இறுதி
நாளான நேற்று (17-11-2015) மாலை, இந்தியா முழுவதிலும் உள்ள 15, வித்யா வாஹினி பள்ளி மாணவர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து ’எடுகேர் ’ நிகழ்ச்சில் ’பகவத் வாணி பாகவத வாஹினி ’ என்ற தலைப்பில், ஸ்ரீ சத்ய சாய்யின் கல்வியை விளக்கினர்.
நாடக வாயிலாக ஆதி சங்கராசாரியா மற்றும் அவரின் நான்கு சீடர்களின் கல்வி முறையை நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்கு மாணவர்கள் நடித்துக் காட்டினர்.மேலும், இயேசுவின் காலத்தில் இருந்து பிரஹலாதன்,மார்க்கண்டேயர்,தர்மஜா, ராமர் மற்றும் விவேகானந்தா போன்றவர்களின் வாழ்க்கை முறைகளும் நாடகத்தில் இடம் பெற்றன.
’நா பாவம் நா புண்ணியம்’ என்னும் தலைப்பில் குழந்தைகளின் குழு நடனம் நடைபெற்றது. அதன்பின் பஜனையைத் தொடர்ந்து மாலை 7.15 மணிக்கு மங்கள ஆரதியுடன் ’ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி’ நிகழ்ச்சி நிறைவடைந்தது.
