மருத்துவக்கல்லூரி டீன் பணியிடங்கள் காலி; தேர்வு செய்ய குழு நியமனம்
மருத்துவக்கல்லூரி டீன் பணியிடங்கள் காலி; தேர்வு செய்ய குழு நியமனம்
UPDATED : நவ 21, 2015 12:00 AM
ADDED : நவ 21, 2015 11:18 AM
கோவை
: காலியாக
உள்ள மருத்துவக் கல்லுாரி டீன் பணியிடங்களை விரைவில் நிரப்ப, சிறப்பு குழுவை ஏற்படுத்தி மருத்துவ கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்
மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில், 20 மருத்துவக் கல்லுாரிகளும், அவற்றுடன்
இணைந்த மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்லுாரி மற்றும்
மருத்துவமனை தலைவராக டீன் பொறுப்பு வகிப்பார்.
தற்போது,
கரூர், சேலம், தேனி, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் ஆகிய எட்டு மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனைகளில் டீன் பணியிடம் காலியாக உள்ளன. அருகில் உள்ள மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனைகளின் டீன்கள் இப்பணியை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
தற்போது காலிப்பணியிடங்களை நிரப்ப, மருத்துவக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவக் கல்வி இயக்குனரகம் சார்பில், கல்வி தகுதி, பதவி மூப்பு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் டாக்டர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்களின் தகுதிகள் குறித்து ஆராய சிறப்புக்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர், விரைவில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பர். விரைவில் டீன் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
