தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை ஆராய்ச்சி மையம் மூலம் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி

பல்கலை ஆராய்ச்சி மையம் மூலம் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி

பல்கலை ஆராய்ச்சி மையம் மூலம் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை
: கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம்
, விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. 

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, ஆர்டிமலையில் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கால்நடை விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி பயிற்சி வழங்கப்பட்டது. கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் அகிலா, டாக்டர் பாரதி ஆகியோர் பயிற்சி அளித்து பேசியதாவது: கால்நடை வளர்ப்பது, அதை பராமரிப்பது என குல தொழிலாக முன்னோர்கள் பார்த்து வந்தனர். அதன் மூலம் அதிக வருவாயும் பெற்று அவர்களின் வாழ்வாதாரங்களை பெருக்குவதுடன், கால்நடைகளை பாதுகாத்தும் வந்தனர். ஆனால், தற்போது இந்நிலை மாறியுள்ளது. கால்நடைகள் வளர்ப்பு குறைந்து வருகிறது. இதை பாதுகாக்க தாங்கள் வீட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும். 

கறவை மாடுகளால் இன்று எண்ணற்ற குடும்பங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி வருகின்றனர். நவீன முறைகளை கையாண்டு, முக்கிய தொழிலாக கருதி இளைஞர்கள் கவனம் செலுத்தி வந்தால், அதிக படியான லாபங்களை ஈட்டலாம். தேசிய கால்நடை இயக்கத்தில், பண்ணை பள்ளிகள் மூலம் மாவட்டம் முழுவதும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். 

தொடர்ந்து கால்நடைகளை தேர்வு செய்தல், இனப்பெருக்கம், தீவனம் தயாரிப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா வளர்ப்பு, நோய்களை தடுக்கும் வழிமுறைகள், குடற்புழு நீக்கம் செய்தல், மூலிகை மருத்துவ முறைகள் மற்றும் கால்டைகளுக்கான காப்பீடு செய்தல் போன்ற தலைப்புகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us