தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி மருத்துவக்கல்லுாரி கொரோனா ஆய்வகம் மாநில தரக்கட்டுப்பாட்டு மையமாக தேர்வு

தேனி மருத்துவக்கல்லுாரி கொரோனா ஆய்வகம் மாநில தரக்கட்டுப்பாட்டு மையமாக தேர்வு

தேனி மருத்துவக்கல்லுாரி கொரோனா ஆய்வகம் மாநில தரக்கட்டுப்பாட்டு மையமாக தேர்வு


UPDATED : ஆக 02, 2020 12:00 AM

ADDED : ஆக 02, 2020 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2020 12:00 AM ADDED : ஆக 02, 2020 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி;
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி கொரோனா ஆய்வகம் மாநில தரக்கட்டுப்பாட்டு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு நுண்ணுயிரியல் துறையில் ஐ.சி.எம்.ஆர்., அனுமதியுடன் 2015ல் வைரஸ் ஆராய்ச்சி - நோய் கண்டறிதல் ஆய்வகம் துவங்கப்பட்டது. ரூ.1கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆய்வக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியது.
25 வகை வைரஸ்களை கண்டறியும் ஆய்வுகள் நடத்தும் வசதிகள் உள்ளன. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் குறித்து 2015 முதல் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் ரியல் டைம் பி.சி.ஆர்., உபகரணத்தை கூடுதலாக ஐ.சி.எம்.ஆர்., வழங்கியது.
கல்லுாரி முதல்வர் இளங்கோவன் கூறுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இக்கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறையின் கொரோனா ஆய்வகத்தை தரக்கட்டுப்பாட்டு மையமாக அங்கீகரித்துள்ளது. இது சிறந்த பணிக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழகத்தின் முதல் வைரஸ் கண்டறியும் ஆய்வகமும் இதுவே. இதனால் வேறு ஆய்வகத்தின் தரத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க, அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கவும் முடியும்&'&', என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us