ஆன்லைன் கல்வியை உறுதிப்படுத்த வாட்ஸ் ஆப் குழு அமைக்க உத்தரவு
ஆன்லைன் கல்வியை உறுதிப்படுத்த வாட்ஸ் ஆப் குழு அமைக்க உத்தரவு
UPDATED : ஆக 23, 2020 12:00 AM
ADDED : ஆக 23, 2020 10:55 AM
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி சேனலில், வீடியோ பாடங்களை பார்த்து, மாணவர்கள், வீட்டிலிருந்தே படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர், வகுப்பாசிரியர், ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் ஆப் குழு, அனைத்து வகுப்புகளுக்கும் அமைக்க வேண்டும். மாணவியருக்கு தனி குழு ஏற்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியர், இதை உறுதி செய்ய வேண்டும்.
வாட்ஸ் ஆப் இல்லாத மாணவருக்கு, குறுந்தகவல், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, படிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, இணையதளம், கல்வி &'டிவி&' மூலம், மாணவர்கள் படிப்பதை, ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து, தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். வகுப்பு வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
