தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்: தினமும் மலை உச்சிக்கு செல்லும் மாணவி

ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்: தினமும் மலை உச்சிக்கு செல்லும் மாணவி

ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்: தினமும் மலை உச்சிக்கு செல்லும் மாணவி


UPDATED : ஆக 23, 2020 12:00 AM

ADDED : ஆக 23, 2020 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2020 12:00 AM ADDED : ஆக 23, 2020 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:
ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன், தினமும் மலை உச்சிக்கு சென்று, ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களை, பாலமலை மாணவி படித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில், 1,500 அடி உயரத்தில் பாலமலை உள்ளது. இங்கு, 33 குக்கிராமங்கள் உள்ளன. மலையாளி இனத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ராமன்பட்டி, கம்மாங்காட்டை சேர்ந்தவர் சரவணன், 45; விவசாயி. இவரின் மூத்த மகள் ஜெயந்தி, 16; இவர், அருகிலுள்ள, குருவரெட்டியூர் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். தற்போது பள்ளி திறக்காத நிலையில், ஆன்லைனில் பிளஸ் 1 வகுப்பில் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து, ஜெயந்தி கூறியதாவது: 

எஸ்.எஸ்.எல்.சி., காலாண்டு தேர்வில், 472, அரையாண்டில், 491, முழு ஆண்டில், 496 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதே லட்சியம். எங்கள் கிராமத்தில் உயர்கல்வி படித்தவர் இல்லை. பெற்றோரும் படிக்கவில்லை. எனக்கு கற்றுத்தர, இங்கு யாரும் இல்லை. இதற்காக, வீட்டு சுவரில், &'ஜெயந்தி ஐ.ஏ.எஸ்.,&' என எழுதிவைத்து, தினமும் எழுந்ததும், அதை பார்த்த பின்பே படிக்க தொடங்குவேன். அதுவே, நன்றாக படிக்க ஊக்கத்தை தருகிறது. 
கொரோனாவால், பள்ளி திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் பிளஸ் 1 பாடம் நடத்தப்படுகிறது. என் கிராமத்தில் மொபைல் சிக்னல் கிடைக்காது. இங்கிருந்து, 1 கி.மீ., உயரத்திலுள்ள மலை உச்சியில், மொபைல் சிக்னல் கிடைக்கும். இதனால், தினமும் அங்கு சென்று, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்களை படிக்கிறேன். ஐ.ஏ.எஸ்., ஆகி எங்களை போல் மலை கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு உதவுவதே லட்சியம். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், பாலமலை சென்ற எஸ்.பி., தீபாகானிகேர், ஜெயந்தியின் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்குரிய செலவை ஏற்றுக்கொண்டார்.
ஆன்லைன் வகுப்பால் சிரமம்: 

ஜெயந்தி கூறுகையில், &'&'ஆன்லைன் வகுப்பால், மலைக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர். மொபைல் சிக்னலும் விட்டுவிட்டு கிடைப்பதால் ஆசிரியர் நடத்தும் பாடம் சரியாக புரிவதில்லை. பள்ளிக்கு செல்லும்போது, பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே கேட்டு தீர்த்துக்கொள்வேன். தற்போது ஆன்லைன் பாடத்தால், சந்தேகத்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உடனுக்குடன் கேட்க முடியவில்லை. இதனால், படிக்க சிரமமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us