தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓ.பி.சி., இட ஒதுக்கீடு விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஓ.பி.சி., இட ஒதுக்கீடு விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஓ.பி.சி., இட ஒதுக்கீடு விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


UPDATED : ஆக 25, 2020 12:00 AM

ADDED : ஆக 25, 2020 01:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2020 12:00 AM ADDED : ஆக 25, 2020 01:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மருத்துவ படிப்புகளில், ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், அ.தி.மு.க.,வின் மேல்முறையீட்டு மனு மீது, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
&'மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய அரசு சட்டம் இயற்றலாம்&' என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும் மத்திய - -மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என, முத்தரப்புக் குழு அமைத்து, கலந்து ஆலோசித்து, இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று வாரங்களில் முடிவெடுக்குமாறு, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ஓ.பி.சி., இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில் நடப்பாண்டே, 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு விவகாரத்தில், அ.தி.மு.க.,வின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதிலளிக்க, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us