தினமலர் நடத்திய வங்கி மாதிரி தேர்வு இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
தினமலர் நடத்திய வங்கி மாதிரி தேர்வு இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
UPDATED : அக் 26, 2009 12:00 AM
ADDED : அக் 26, 2009 01:45 PM
ஸ்டேட் பாங்கில் காலியாக உள்ள 17 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் பல கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு நாடு முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதற்கான ஆயத்த பணியாக தினமலர் நாளிதழ் சார்பில் நேற்று மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
கடலூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது.
காலை 8.30 மணியில் இருந்தே இளைஞர்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் ஆர்வமுடன் குவியத் துவங்கினர். கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்படும் மாதிரி தேர்வு தன்னம்பிக்கையை ஊட்டியது மட்டுமின்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அரசு வங்கிகள் தொடர்பான தேர்வை எதிர்கொள்ளவும் இந்த தேர்வு பயனுள்ளதாக இருந்தது.
எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், எங்களது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய
தினமலருக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தெரிவித்தனர். நேற்று நடந்த வங்கி மாதிரி தேர்வு முடிவுகள் வரும் 30ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியிடப்படும்.
