தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் வளர்க்க உதவும் புதிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி

திறன் வளர்க்க உதவும் புதிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி

திறன் வளர்க்க உதவும் புதிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி


UPDATED : செப் 07, 2020 12:00 AM

ADDED : செப் 07, 2020 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2020 12:00 AM ADDED : செப் 07, 2020 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில கவர்னர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

புதிய கல்வி கொள்கை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக உள்ளது. மாணவர்களின் திறனையும் அறிவையும் வளர்க்கும். மாணவர்கள் கற்பதை, வெளிக்கொண்டு வர உதவுகிறது. திறனை வளர்க்க உதவுகிறது. தேர்வு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க உதவுகிறது. சர்வதேச கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துறைகளை தேர்வு செய்வதற்கு உதவுகிறது.
புதிய கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்வி கொள்கையாக பார்க்கின்றனர். கொள்கை வகுப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன.
கல்வியில் மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பங்குண்டு. புதிய கொள்கை மற்றும் கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அறிவுசார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. 21 நூற்றாண்டில் சமூக மற்றும் பொருளாதார அம்சத்திற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகிறது. மாநிலங்களின் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us