தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடிகர் சூர்யா கேள்விக்கு நீட் ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை

நடிகர் சூர்யா கேள்விக்கு நீட் ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை

நடிகர் சூர்யா கேள்விக்கு நீட் ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை


UPDATED : செப் 18, 2020 12:00 AM

ADDED : செப் 18, 2020 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2020 12:00 AM ADDED : செப் 18, 2020 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நடிகர் சூர்யா கேள்விக்கான விடையை &'நீட்&' ரிசல்ட் தரும். அதன் பின் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்று பா.ஜ. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுக்க பிரதமர் மோடியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் பா.ஜ. தெளிவாக உள்ளது. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தொடருமென முதல்வர் அறிவித்திருப்பது அவரது கருத்து. மாணவர்கள் மூன்று மொழி படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
&'நீட்&' தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் உள்ளது. அவரது கேள்விக்கான விடையை நீட் ரிசல்ட் தரும். அதன் பின் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us