தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு


UPDATED : அக் 15, 2020 12:00 AM

ADDED : அக் 15, 2020 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2020 12:00 AM ADDED : அக் 15, 2020 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் இசைவு அளிப்பது குறித்த விவகாரத்தில், அவரது செயலரிடம் விபரம் பெற்று நாளை தெரிவிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, திருமங்கலம் அச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், மேலக்கோட்டையை சேர்ந்த மாணவர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிஷன், &'2019 - 20 நீட் தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். &'இவர்களில், ஆறு பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ்., சீட் பெற முடிந்தது. இது 0.1 சதவீதம் தான்&' என அறிக்கை சமர்ப்பித்தது.
நடவடிக்கை

இப்பரிந்துரைப்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழக சட்டசபையில் செப்., 15ல் நிறைவேற்றப்பட்டது.அது கவர்னரின் இசைவிற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை இசைவு அளிக்கவில்லை.நீட் தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாக உள்ளன.
சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிடில், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். கர்நாடகாவில் இதுபோன்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சட்டத்தை, 2020 - 21ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டனர்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, நேற்று காலை விசாரித்தது.
விசாரணை

கவர்னரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி விபரம் பெற்று தெரிவிக்க, விசாரணையை மாலை ஒத்திவைத்தனர்.மீண்டும் விசாரணையின் போது, தமிழக அரசுத் தரப்பில், &'இரண்டு வாரம் கால அவகாசம் தேவை&' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் உத்தரவு:

அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன், சட்டசபையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்., 16ல் நீட் முடிவு வெளியாக உள்ள நிலையில், சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியாத பட்சத்தில், நடப்பு ஆண்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.கவர்னரின் செயலரிடம் விபரம் பெற்று, நாளை, 16ம் தேதி தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us