தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொட்ட இடமெல்லாம் தொல்லியல் சான்றுகள்: தொட்டணம்பட்டியில் பாண்டியர், நாயக்கர் வரலாறு

தொட்ட இடமெல்லாம் தொல்லியல் சான்றுகள்: தொட்டணம்பட்டியில் பாண்டியர், நாயக்கர் வரலாறு

தொட்ட இடமெல்லாம் தொல்லியல் சான்றுகள்: தொட்டணம்பட்டியில் பாண்டியர், நாயக்கர் வரலாறு


UPDATED : அக் 16, 2020 12:00 AM

ADDED : அக் 16, 2020 05:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2020 12:00 AM ADDED : அக் 16, 2020 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பாண்டியர், நாயக்கர்கள் கால வரலாறு கூறும் ஆதாரங்கள் நிறைந்த தொட்டணம் பட்டியில் வரலாற்று தொல்லியல் ஆய்வு தேவை.திண்டுக்கல்லிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தொட்டணம்பட்டி. இங்கு தாழம்பூ அதிகமாக இருந்த பகுதி என்பதால் &'தாழவனம்&' என்ற பெயர் இருந்தது. இன்றோ தொட்டணம்பட்டி என்றாகி விட்டது.மன்னர்கள் காலத்தில் திண்டுக்கல் போர்களமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்த நல்லமானார்கோட்டை அருகே தொட்டணம்பட்டி கிராமத்தில் மீண்டும் பழைமையை பறைசாற்றும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
தேவதான கல்வெட்டு

இங்குள்ள வயல்வெளியில் உள்ள ஒரு கல்வெட்டு, அக்காலத்தில் தேவரடியாருக்கு வழங்கப்பட்ட தான நிலத்தை குறிக்கிறது. அழகிய சேவடியாள் எனும் வார்த்தை, திருவிழா காலங்களில் நடனத்தில் ஈடுபடும் பெண்களை குறிக்கும். அவர்களை தேவரடியார் எனவும் அழைப்பர்.இந்த கல்வெட்டு முழுவதுமே மெய்யெழுத்தின்றி உள்ளது. 1750க்குப்பின் வீரமாமுனிவர் வந்த பின் எழுத்தின் மீது புள்ளி வைக்கும் பழக்கம் உருவானது. எனவே, கி.பி., 1500 -- 1600 காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என கருதுகின்றனர்.
தூம்பிகள்

இங்குள்ள பரந்த குளம் மற்றும் பாசன பகுதி, வல்லகொண்டான் நாயக்கர் சமுத்திரம் எனப்படுகிறது. அக்காலத்தில் குளங்களில் தூம்பிகள் வைத்து நீரின் அளவை தெரிந்து கொள்வர். இக்குளத்தில் இரண்டு ஜோடி தூம்பிகள் உள்ளன. ஒன்று பாண்டியர் காலத்தை குறிப்பிடுகிறது. மற்றொன்று நாயக்கர் காலத்தை குறிக்கிறது. இவற்றில் விளக்கு, பூக்கள் என வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.800 வருடங்களுக்கு முன்பு பாண்டியர்கள் குளக்கரையின் மீது கன்னிமார்கள் சிலை வடித்துள்ளனர். கன்னிமார்களில் வராகி, பிராமி (அபிராமி), மகேஸ்வரி ஆகியோர் சிலைகள் மட்டுமே உள்ளன. அதற்கு பின்பு வந்த நாயக்கர்களும் புதிதாக கன்னிமார் சிலை வடித்துள்ளனர். இவை 1372 ல் வந்த குமார கம்பளநாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.
மீன் சின்னம் பொறித்த கோயில்

பாண்டியர்கள் காலத்தை உறுதி செய்யும் விதமாக இங்குள்ள சிவன் கோயிலில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயிலின் உள்ளே லிங்கத்தின் பாதியளவு ஆவுடை (பீடம் போன்ற பகுதி) மட்டுமே உள்ளது. லிங்கத்தை காணவில்லை. அதற்கு பின்பு வந்தோர் தற்போது ஆவுடை மீது விநாயகர் வைத்து வழிபடுவதோடு கோயில் பூச்சு வேலைகளையும் செய்துள்ளனர். கோயிலையும், சுற்றுப்புற பகுதிகளையும் தொல்லியல் துறை ஆய்வு செய்தால் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
தொட்டணம்பட்டியில் இருந்து 1 கி.மீ., தொலைவில் மாலைக்கோயில் என்ற இடம் உள்ளது. இங்கு வீரக்கல் எனும் பெரிய கற்சிற்பம் 10 அடி உயரத்தில் உள்ளது. கி.பி., 1500 காலகட்டங்களில் வாழந்த நாயக்கர் ஒருவர் தங்கள் ஆட்சி பகுதிகளை பாளையபட்டுகளாக பிரித்து பல்வேறு குறுநில நாயக்க மன்னர்களிடம் வழங்கி விடுவர். இவர்கள் ஆட்சி செய்த காலங்களில் செய்த சாதனைகள், வழிபாடுகள், பெருமைகள் போன்றவற்றை கல்வெட்டுகளாக பொறித்து வைத்துள்ளனர். இங்குள்ள மக்கள் இன்றும் இந்த 10 அடி கல்வெட்டை கடவுளாக வழிபடுகின்றனர்.
இதற்கு அருகே உள்ள நல்லமனார்கோட்டையில் பாண்டியர்கள் கால போர்க்களமாகவும், ஆயுதம் தயாரிக்கப்படுத்தப்பட்ட இடமாகவும் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. அதற்கு அருகிலேயே கோயில், குளம், பாசன பகுதி, தூம்பிகள், வீரக்கல் போன்றவை பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் கால கிராமங்களை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.
பொக்கிஷங்களை பாதுகாக்கணும்

வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் கூறியதாவது: 

இங்குள்ள கல்வெட்டுகள் பொக்கிஷங்களாக பாதுகாக்கக்கூடியவை. அக்காலத்திலேயே நீரை அளவிட தூம்பிகளை பயன்படுத்தியதோடு சாதனைகளை வீரக்கல்லிலும் செதுக்கி வைத்துச் சென்றுள்ளனர்.
தொல்லியல் ஆய்வு அவசியம்

வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ் கூறியதாவது: 

இங்குள்ள கல்வெட்டுகளை இரண்டு வருடங்களாக பார்த்தும், ஆய்வும் செய்து வருகிறேன். இது குறித்து பல தொல்லியல் ஆய்வாளர்களிடமும் கேட்டுள்ளேன். பாண்டியர், நாயக்கர்கள் இங்கு இருந்ததற்கும், கோயில் கட்டி வழிபட்டதற்கும் சான்றுகள் உள்ளன. இவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அருமை தெரியவில்லை

சந்திரசேகர் கூறியதாவது:
 
இங்குள்ள பலரும் இவற்றின் அருமை தெரியாமல் கடந்து சென்றுள்ளனர். ஆய்வாளர்கள் யாருமே இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. ஆய்வு செய்தால் திண்டுக்கல்லிலும் கீழடி போல வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us